பள்ளிக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் மீது லாரி மோதல்!! கணவர் கண்முன்னே நேர்ந்த சோகம்!!
பள்ளிக்கு செல்லும் போது தனியார் பள்ளி ஆசிரியை மீது லாரி மோதியது. இதில் அவர் கணவர் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகில் உள்ளது வெங்கம்பாக்கம். இந்த பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி தெரசா வயது 37. இவர் அருகில் உள்ள ஊரான சேலையூரில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல தெரசா பள்ளி செல்வதற்கு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் மப்பேடு அருகே செல்லும் போது அவர்களின் பின்னால் ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்தது.
இதில் அதிர்ந்த கணவன் மனைவி இருவரும் நிலைத்தடுமாறி லாரியின் பக்கவாட்டில் விழுந்துள்ளனர். இதில் வேகமாக வந்த லாரியின் சக்கரம் தெரசாவின் காலில் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த தெரசா கணவர் கண்முன்னே துடிதுடித்து இறந்தார்.
அலெக்சாண்டர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்தில் பலியான தெரசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அலெக்சாண்டர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.