இந்த வகை உணவுகளை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்காதீர்கள்!! எச்சரிக்கை புற்றுநோய் வருமாம்!!
பிரஷர் குக்கரில் சமைத்தால் சில வகை உணவுகள் தீய விளைவுகளை ஏற்படுத்தும். புற்றுநோய், மலட்டுத்தன்மை, நரம்பியல் கோளாறுகள், போன்ற உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பிரஷர் குக்கர் சமையல்.
ஜர்னல் ஆஃப் தி சயின்ஸ் ஆஃப் ஃபுட் அண்ட் அக்ரிகல்ச்சர் நடத்திய ஆய்வின்படி, பிரஷர் சமையல் உணவின் லெக்டின் உள்ளடக்கத்தை குறைக்கிறது. லெக்டின் என்பது ஒரு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் ஆகும். இது தாது உப்புக்கள் உறிஞ்சப்படுவதை தடுப்பதன் மூலம் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை குறைக்கிறது.
*** நீராவியின் அழுத்தத்தை பயன்படுத்தி உணவை சமைக்கும் பிரஷர் குக்கர் குக்கிங், சமையல் செயல்முறையை கணிசமாக துரிதப்படுத்துகிறது. எனவே இது மக்களிடையே பிரபலமாக உள்ளது.
*** ஆனால் தற்போது வந்துள்ள ஆராய்ச்சி முடிவுகளின் படி எல்லா உணவுகளையும் குக்கரில் சமைப்பது நல்லதல்ல. அதுவும் மாவு பொருட்களை குக்கரில் சமைக்கும் பொழுது அவை அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகின்றன. இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள், மலட்டுத்தன்மை, போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
*** ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பிரஷர் குக்கர் வித்தியாசமாக செயல்படுகிறது. அரிசியை சாதாரணமாக வேக வைப்பதற்கு, குக்கரில் வேக வைப்பதற்கும் நிறைய வித்தியாசப்படுகிறது. ஆனால் இறைச்சியை பொறுத்தவரை குக்கரில் சமைக்கும் இறைச்சி ஆட்டு இறைச்சி, எளிதில் ஜீரணமாகும் தன்மையை பெறுகிறது.
1. நூடுல்ஸை குக்கரில் சமைக்கவே கூடாது. ஏனெனில் இதில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இதனை குக்கரில் சமைக்கும் பொழுது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே நூடுல்ஸ் வோக் அல்லது பாத்திரத்தில் சமைக்க வேண்டும்.
2. அரிசியை ஒருபோதும் குக்கரில் சமைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அரிசியில் உள்ள மாவுச்சத்து குக்கரில் சமைக்கப்படும் பொழுது ஏராளமான ரசாயனங்களை வெளிப்படுத்தும். பிரஷர் குக்கரில் செய்யப்படும் சாதம் உங்கள் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே பிரஷர் குக்கரில் சாதம் சமைக்க வேண்டாம்.
3. அடுத்ததாக உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் சமைத்த பிறகு சாப்பிடக்கூடாது. பிரஷர் குக்கரில் சமைக்கும் பொழுது அதன் சுவையை அழிப்பதோடு மட்டுமில்லாமல், சத்தையும் அழித்துவிடும். எனவே குக்கரில் வேகவைக்கும் உருளைக்கிழங்கு ஆரோக்கியத்தை கெடுக்கும்.
4. பலரும் மீன் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் பிரஷர் குக்கரில் மீனை சமைத்தால் பல நோய்கள் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா?. பிரஷர் குக்கரில் சமைக்கப்படும் மீன் மிகவும் ஆபத்தானது.
5. பாஸ்தாவை பிரஷர் குக்கரில் சமைக்க கூடாது. அதில் மாவு சத்து அதிகம் உள்ளது. இதன் காரணமாக இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் சுவையும் மிகவும் மோசமாக இருக்கும். அதனால் தான் அதை ஒரு பாத்திரத்தில் அல்லது வாணலியில் மட்டுமே சமைக்க வேண்டும்.
6. அதேபோல் கிழங்கு வகைகள் உருளைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, தானியம், போன்ற மாவு சத்து கொண்ட பொருட்களை குக்கரில் சமைக்க வேண்டாம்.