இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!!

0
119

இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!!

இரவில் எப்போதும் மிருதுவான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் ஜீரணம் ஆகும். ஏனெனில் நாம் இரவு சாப்பிட்டவுடன் எந்த வேலையும் இல்லாமல் உறங்கச் சென்று விடுகிறோம். அதனால் லேசான உணவை உட்கொண்டால் எளிதில் ஜீரணம் ஆவதால் அஜீரண கோளாறு இருக்காது.

** கடினமான உணவு செரிமானத்தை பாதிக்கலாம் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.

** எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது. இது செரிமான கோளாறுக்கு வழி வகுக்கும் என்பதால் இதை இரவு எடுத்துக் கொள்ளாமல் தவிப்பது நலமானது.

** இரவு எப்பொழுதும் 7-8 மணிக்குள் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்பொழுதும் சாப்பிட்டவுடன் உறங்காமல் ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது நல்லது. அதற்கு நாம் நேரமாக சாப்பிட்டால்தான் சரியாக ஒரு மணி நேரம் கழித்து உறங்கும் பொழுது உணவு ஓரளவு ஜீரணம் ஆகி இருக்கும்.

** விரைவான தூக்கமும் கிடைக்க உதவும். நாம் நேரமாக சாப்பிடுவதால் சீக்கிரம் ஜீரணம் ஆகும் இதனால் நமக்கு தூக்கமும் நன்றாக வரும்.

** உடல் எடை குறைக்க உதவும். எளிய உணவுகளை இரவில் நேரமாக சாப்பிடுவது உடல் எடையை பராமரிப்பதற்கு உதவும்.

** மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவும். நேரமாக சாப்பிடுவது நமது ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை குறைத்து அஜீரணம் சம்பந்தமான மலச்சிக்கல் போன்றவற்றை நீக்கும்.

** மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். இரவில் நிறைய உணவை சாப்பிட்டு, செரிமான கோளாறு உண்டாக்கி, உடல் எடை அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் பிரச்சனை நாம் நேரமாக சாப்பிடுவதால் தடுக்கப்படுகிறது.

** இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். எளிய உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சரியான அளவில் எப்பொழுதும் பராமரிக்கப்படும்.

Previous articleவாயில் போடும் ஒரு பொருளை மருவில் தடவினால் போதும்!! 2  நாட்களில் உதிர்ந்து விடும் சூப்பர் டிப்ஸ்!! 
Next articleலஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!