அரசு விரைவு பேருந்துகளில் சூப்பரான வசதி அறிமுகம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
தமிழக அரசானது பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தினமும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது மக்களுக்கு கூடுதல் பேருந்துகள் மற்றும் அதில் முன்பதிவு செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
முன்பதிவிற்கான இருக்கை வசதி 51,046 யில் இருந்து 62,464 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக முக்கிய நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமல்லாது, பிற தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதனையடுத்து அரசு விரைவு பேருந்துகள் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகின்ற ஏசி பஸ்கள் மற்றும் டீலக்ஸ் பஸ்களில் இருக்கைகளின் மேற்பகுதி சுத்தமாக இல்லை என்று பயணிகள் குற்றம் கூறி உள்ளனர்.
எனவே, இருக்கைகளுக்கு போடப்பட்டிருக்கும் துணி கவர் தற்போது ரெக்சின் கவராக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து அதிகாரிகள் கூறி இருப்பதாவது,
இந்த துணி கவர்களின் மேலே டீ, காபி, நொறுக்கு தீனி போன்ற ஸ்நாக்ஸ் பொருட்கள் வைக்கப்படுவதால் கறையாகி அழுக்கு படிந்து விடுகிறது. எனவே, இந்த துணி கவர்களை மாற்றிவிட்டு ரெக்சின் கவர்களை பொருத்தி உள்ளோம்.
பயணிகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் இது மாற்றப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஒரு சில பஸ்களில் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களில் அனைத்து விரைவு பேருந்துகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறி உள்ளனர்.