25கோடி நிவாரண நிதி வழங்கிய ரஜினி பட வில்லன் : பாராட்டு மழையில் நடிகர்!

0
177

பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 909 க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 19 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 79 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தள்ளனர் மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு போதிய நிதி இல்லாமல் திணறியது.

இதனையடுத்து கொரோனா நிவாரண நிதி வழங்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. அவ்வாறு நிவாரணம் வழங்கும் தனி நபர் அல்லது நிறுவனத்தின் தொகைக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மத்திய அரசின் பொது நிவாரண நிதியில் 25 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். நடிகர் அக்ஷய்குமார் ரஜினி நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதளதளவென தொடையை காட்டி கவர்ச்சி கடலென யாஷிகா ஆனந்த் : கோபத்தில் கொதித்த நெட்டிசன்கள்!
Next articleகிராமிய பாடகி: நடிகை பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்!