மரவள்ளிக் கிழங்கு வாங்கினால் அதில் இப்படி ஒருமுறை முறுக்கு செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!!

0
78
#image_title

மரவள்ளிக் கிழங்கு வாங்கினால் அதில் இப்படி ஒருமுறை முறுக்கு செய்து பாருங்கள்!! செம்ம ருசியாக இருக்கும்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு முறுக்கு மிகவும் பிடித்த பண்டமாக இருக்கிறது.அதனை நொறுங்கும் சத்தத்தோடு சுவைக்கும் பொழுது சொல்ல வாரத்தையே இல்லை.

இதில் பொட்டுக்கடலை முறுக்கு,வெண்ணை முறுக்கு,பூண்டு முறுக்கு,ரிங் முறுக்கு,அரிசி முறுக்கு என்று பல வகைகள் இருக்கிறது.பொதுவாக முறுக்கு செய்வது மிகவும் கடினம் என்று உங்களில் பலர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.கடையில் வாங்கி உண்ணும் முறுக்கு டேஸ்ட்டாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமான முறையில் இருக்குமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.முறுக்கு சுவைப்பது எப்படி சுலபமோ அதேபோல் தான் அதனை செய்வதும் சுலபம்.இதில் மரவள்ளிக் கிழங்கு முறுக்கு சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மரவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரெட்,கால்சியம்,பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*மரவள்ளிக் கிழங்கு – 1/2 கிலோ

*பச்சரிசி மாவு – 1/4 கிலோ

*பச்சை மிளகாய் – 10

*ஓமம் – 2 தேக்கரண்டி

*இஞ்சி – 1 துண்டு

*எண்ணெய் – முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு

*வெண்ணெய்- 100 கிராம்

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் இஞ்சி,பச்சை மிளகாய் போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.அடுத்து அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும்.பச்சை மிளகாயின் காம்பை நீக்கி விடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள இஞ்சி துண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் 2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 கிலோ மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்கவும்.பின்னர் வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.அடுத்து காய் சீவல் கொண்டு மரவள்ளி கிழங்கை துருவிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள மரவள்ளிக் கிழங்கு, 1/4 கிலோ பச்சரிசி மாவு,அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்னர் அதில் 100 கிராம் வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து முறுக்கு செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

அடுத்து முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள முறுக்கு மாவை அதில் போட்டு எண்ணெய்யில் பிழிந்து கொள்ளவும்.பின்னர் முறுக்கு இருபுறமும் சிவந்து வந்த பின்னர்
அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.