செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!

0
111
mild-earthquake-in-chengalpattu-recorded-as-3-2-on-the-richter-scale
mild-earthquake-in-chengalpattu-recorded-as-3-2-on-the-richter-scale

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!

வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில் இன்று காலை காலை 7.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியில் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் காலை 7.35 மற்றும் 7.42 மணியளவில் அதாவது இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு முன்னதாக கர்நாடக மாநிலத்தின் விஜயபுரத்திலும் இன்று காலை 6.52 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இருந்த போதிலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபோஸ்ட் ஆபிஸில் 1890+ காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.81,000/- ஊதியம்!!
Next articleஇன்னும் சில மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்..!!