தென் மாவட்டங்களில் மழை இடைவிடாத பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நேற்று முதல் மழை நிற்காமல் பெய்து வருகின்றது. அதனால் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருகி மிதக்கும் குடியிருப்புகள் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி நிலவுகின்றது. இதன் காரணமாக நேற்று தென்தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கனமழை தென்காசி தூத்துக்குடி குமரி மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவையில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ளார். மேலும் இடி மற்றும் மின்னல் பலத்த காற்றுடன் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தூத்துக்குடியில் மற்றும் தென்காசியில் அதிகமாக மழை பெய்வதால் நீர் தேங்கி மக்கள் வெளிவராத நிலமை ஏற்பட்டுள்ளது. நாளை தென் தமிழகத்திலும் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மற்றும் மின்னல் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தாமிரபரணியில் இருந்து 3000 கன அடி நீர் திறந்து விடப்படுவதால் தாமிரபரணி உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவித்துள்ளது. அதேபோல் குற்றாலங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருவதால் இப்போதைக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலும் கன்னியாகுமரியிலும் இடைவிடாத பெய்யும் மழையினால் குடியிருப்புகளில் நீர் புகுந்த நீர் தேங்கி மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர். மேலும் மழை நாளையும் தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.