தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி!! உற்சாக வரவேற்பை மேற்கொள்ளும் நிர்வாகிகள்!!
மக்களவை தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசியல் கட் சிகளின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில், வாக்கு பெருமான்மை குறைவாக உள்ள தமிழகத்தில், பா.ஜ.க சார்பில் வாக்கு வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கிட்டத்தட்ட ஆறு முறை பிரச்சார வேட்டையை மேற்கொண்ட பிரதமர் மோடி, தற்போது ஏழாவது முறையாக தமிழகத்தில் அடியெடுத்து வைக்கிறார்.
அதன்படி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னையில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து, வாகனத்தில் பேரணியாக சென்றவாறு, வாக்கு சேகரிக்கிறார்.சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த பேரணியில் திரளான பாஜகவினர் பங்கேற்கின்றனர்.
இதனையொட்டி சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் வாயிலாக நாளை வேலூர் செல்லும் பிரதமர், வேலூர் கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் அவர், தனி விமானம் மூலம் மஹாராஷ்டிரா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக வுடான கூட்டணியின் போதே தமிழகத்தில் கால்பதிக்காத பாஜக.தற்போது, தனித்த நிலையில் களமிறங்கியுள்ள பாஜக, தமிழகத்தில் தன் தடத்தை பதிக்குமா ? என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க,
மூன்றாவது முறையாகவும் மோடியே ஆட்சியை பிடிப்பார் என்ற கருத்து கணிப்புகள் பரவி வருவதால், அரசியல் கடசிகளுக்கிடையில், போட்டி முனைப்புகள் தீவிரமடைந்துள்ளன.