இதுபோல் செய்வது மிகவும் தவறு!! கண்டனம் தெரிவித்த இசைப்புயல்!!

0
108
It is very wrong to do this!! Condemned music storm!!
It is very wrong to do this!! Condemned music storm!!

பழைய பாடல்களை அனுமதி இல்லாமல் ரீமிக்ஸ் செய்யும் கலாச்சாரத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

1992-ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இந்திய திரைப்பட உலகில் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, ஆங்கிலம், போன்ற பன்மொழி திரைப்படங்களுக்கும் இசை அமைத்ததன் மூலம் இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.

இந்த சூழ்நிலையில் தற்போது பெருகிவரும் ரீமிக்ஸ் கலாச்சாரத்திற்கு ரகுமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்போது உள்ள சூழ்நிலையில்  தமிழ் திரையுலகில் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பழைய படங்களில் உள்ள பாடல்களை ரீமிக்ஸ் செய்து அதை புதிய படங்களில் இடம்பெறச் செய்து புகழ்பெற்று வருகிறார்கள். இந்த ரீமிக்ஸ் கலாச்சாரத்தில் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன.

இது பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறும் போது, சில வருடங்களுக்கு முன்னால் வந்த பழைய படங்களில் உள்ள சில பாடல்களை காப்பி அடித்து ரீமிக்ஸ் செய்கிறார்கள். இந்த கலாச்சாரத்தை தற்போது பெருமையாகவும் கருதுகிறார்கள். இது மிகவும் தவறு. பாடலை உருவாக்கியவர்களின் உரிய அனுமதி பெறாமல் ரீமிக்ஸ் செய்வது கண்டனத்துக்குரிய ஒன்று.

பெருகிவரும் ஏஐ தொழில்நுட்பங்கள் பயன்பாட்டால் வரும் நாட்களில் இந்த ரீமிக்ஸ் கலாச்சாரம் பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்து ஏராளமான பேர் தங்களுடைய வேலையை இழக்க  நேரிடும் என அவர் தெரிவித்தார்.

Previous articleஆழமான ஒரு குரல் கேட்டது!! 7 முறை தற்கொலையிலிருந்து மீண்டு வந்துள்ளேன்!! செல்வராகவன்
Next articleகிராமத்து மக்கள் விரும்பி உண்ணும் உப்பு கண்டம்!! அடேங்கப்பா இதில் இத்தனை நன்மைகள் இருக்கா?