இந்திய-சீனா எல்லை அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு; படைகள் விலக்கிக் கொள்ள முடிவு

0
133

கள்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதலை தவிர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி -உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்திய-சீனா எல்லையில் இருதரப்பிலும் குவிக்கப்பட்டிருந்த ராணுவ படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க இருதரப்பிலும் உறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை சம்பந்தமான தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பு ஒற்றுமையை வளர்க்க இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Previous articleஅறந்தாங்கி சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நேரில் சென்று நிதியுதவி
Next articleசீனாவுக்கு அடுத்த ஆப்பு…??கடலுக்கு அடியில் 2200 கிலோமீட்டர் தூரத்தில் கேபிள்…!!சென்னையை 8 தீவுகளுடன் இணைப்பு…?? அசரவைக்கும் பிளான்..!