செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ள செங்காடு என்ற கிராமத்தில் கடந்த 11ம் தேதி அன்று கோயில் நிலம் தொடர்பாக திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இமயம் குமார் என்பவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
எம்எல்ஏ இதயவர்மன்,
இமயம்குமார் தரப்பினர் துப்பாக்கியால் சுட முயன்றனர்.இதனால் விவகாரம் முற்றி போலீசாரிடம் தகவல் செல்லவே இது தொடர்பாக, இதயவர்மன் உள்ளிட்ட19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். எம்எல்ஏ பயன்படுத்தியதாக கூறப்படும் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருந்தபோதிலும் சந்தேகத்தின் அடிப்படையில் செங்கரடு கிராமத்தில் உள்ள எம்எல்ஏ இதய வர்மன் வீட்டில் போலீசார் 2 மணி நேரமாக சோதனை செய்தனர். சோதனையில் துப்பாக்கி, துப்பாக்கி குண்டு தயாரிக்கும் இயந்திரம், துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
துப்பாக்கி குண்டுகள், குண்டுகளை தயாரிக்கும் குப்பி, வெடிமருந்துகள், குண்டு தயாரிக்கும் இயந்திரங்கள் எப்படி எம்எல்ஏவுக்கு கிடைத்தன இதன் பின்னணியில் தொடர்புடையவர்கள் யார் என்ற விசாரணையில் போலீசார் களம் இறங்கி உள்ளனர். மேலும் எம்எல்ஏ வீட்டில் கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட எம்எல்ஏ துப்பாக்கியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் அது தொடர்பான ஆய்வு முடிவுகள் கிடைக்கும்.அப்போது இதன் பின்னணியில் தொடர்பு உடையவர்கள் மற்றும் பல அதிர்ச்சிக்கரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் என்று போலீஸார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.