சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தலைமைக் காவலரின் மனைவியை கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவாய் புதூர் ஊராட்சியை சேர்ந்தவர் சின்னத்துரை இவர் மத்திகிரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சின்னதுரையின் மனைவி செங்கொடி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, தகாத உறவு காரணமாக வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு மகன்களையும் சின்னதுரையின் சகோதரி கண்காணித்து வந்து இருக்கிறார்.
வீட்டை விட்டுச் சென்ற சின்ன துரையின் மனைவி ஆறுமாதங்களுக்கு பெண் திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் சின்னதுரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் சின்னதுரையின் அக்கா உட்பட அவரின் உறவினர்கள் அனைவரையும் தகாத வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். இதைக் கேட்ட சின்னதுரை தன் மனைவியின் மீது கோபம் கொண்டு அவரை கண்டித்துள்ளார். நேற்றைய தினம் சின்ன துரையின் வீட்டிற்கு வந்த அவரின் அண்ணன் இரத்தினம் என்பவரையும் செங்கொடி தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த ரத்தினம், அருகில் இருந்த கட்டையால் செங்கொடியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த செங்கொடி, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து செங்கொடியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் ரத்தினம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நடந்தது பற்றி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ரத்தினத்தின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர்.