மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா? ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா? குழப்பத்தில் பாஜக!

0
188
Who is the Next Union Minister from Tamil Nadu-News4 Tamil Online Tamil News Channel1
Who is the Next Union Minister from Tamil Nadu-News4 Tamil Online Tamil News Channel1

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா? ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா? குழப்பத்தில் பாஜக!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக,பாமக,தேமுதிக போன்ற தமிழக கட்சிகள் கூட்டணியான பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய அளவில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. இந்த கூட்டணியில் தமிழகத்தில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ஒபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றது முதல் அவர் அமைச்சர் ஆக போகிறார் என்ற தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. தமிழக துணை முதல்வரான ஓ பன்னீர்செல்வமும் டெல்லி அரசியலில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தன் மகனை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என்று முயற்சித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்வம் காட்டவில்லை என்ற சந்தேகம் உள்ளது. காரணம் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் மத்திய அமைச்சரானால் மாநிலத்தில் தமிழக துணை முதல்வரான ஓ பன்னீர்செல்வம் கை ஓங்கி விடும் என்று எடப்பாடி தரப்பு அஞ்சுகிறது. இதையெல்லாம் கவனித்து கொண்டே ஒ பன்னீர்செல்வம் தரப்பு ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமாரை அமைச்சராக்கும் தங்கள் பணியை கவனமாக செய்து வருகிறது.

Who-is-the-Next-Union-Minister-from-Tamil-Nadu-News4-Tamil-Online-Tamil-News-Channel
Who-is-the-Next-Union-Minister-from-Tamil-Nadu-News4-Tamil-Online-Tamil-News-Channel2

இவர்களை சமாளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டணி கட்சியான அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் பதவியை பெற்று கொடுக்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தாலும் கடந்த காலங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததை காரணமாக வைத்து அவருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க பாஜக தரப்பும் தயாராக உள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தற்போதுள்ள மத்திய அமைச்சரவையை இந்த மாதத்தில்  விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்த விரிவாக்கத்தின் போது  எப்படியாவது அமைச்சர் பதவியை பெற்று விட பாமகவின் அன்புமணி ராமதாசும், அதிமுகவின் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். 

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அமைச்சரவையில் இணைத்துக் கொள்வது பற்றி பாஜகவின் அமீத்ஷா ஏற்கனவே சில யோசனைகளை ஓபிஎஸ்சிடம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் டெல்லியில் அமீத்ஷாவை சந்தித்த ஓபிஎஸ், அதனை மீண்டும் வலியுறுத்தி விட்டு சென்னை திரும்பியிருக்கிறார், இந்த நிலையில், பாமகவின் சார்பாக அன்புமணி ராமதாசும் பிரதமர் மோடி அவர்களை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

டெல்லி வட்டாரத்தில் நடக்கும் இந்த நகர்வுகளை பார்க்கும் பொது ஏற்கனவே அமைச்சராக இருந்த அனுபவமுள்ள அன்புமணி ராமதாசுக்கே அதிக வாய்ப்புள்ளது போல தெரிகிறது. இந்தச் சூழலில் தான் அன்புமணி ராமதாசுக்கு எதிராக உள்ள சி.பி.ஐ. வழக்கில், கீழ் கோர்ட்டில் பதியப்பட்ட குற்றப் பத்திரிகையை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்திருக்கிறது. இதனை தங்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கும் பாமகவினர், அன்புமணி அமைச்சராவதில் இனி பிரச்சனை இருக்காது என நம்பிக்கையுடன் பேசி வருகின்றனர். 

பாஜக தரப்பும் தமிழகத்தில் திமுகவினரை சமாளிக்க அன்புமணி ராமதாஸ் தான் சரியான நபர் என்று கருதுகிறது. எப்படியிருந்தாலும் தமிழகத்தில் பாஜக கூட்டணி அரசியலில் பிரகாசிக்க வேண்டுமென நினைத்தால் ஓபிஸ் மகனுக்கும் குறைந்தபட்சம் இணை அமைச்சர் பதவியாவது வழங்கி தமிழகத்திற்கான முக்கியத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். தற்போது யாராவது ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரலாமா? அல்லது இருவருக்கும் தரலாமா? ஒருவருக்கு என்றால் யாருக்கு தருவது என்பது உள்ளிட்ட பல குழப்பங்களில் பாஜக தலைமை உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleஅஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர்
Next articleசுஷ்மா சுவராஜ் கூறிய கடைசி வரிகள்! இதை எதிர்பார்த்தேன்! இவர்களுக்கு எனது நன்றிகள்!