இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
201

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 43,082 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,09,788 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 492 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,35,715 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,379 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 87,18,517 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 93.66 ஆக உள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 4,55,555 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 11,31,204 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 13,70,62,749 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleதந்தையும் மகனும் சேர்ந்து குடி! கடைசியில் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!
Next articleஇந்திய தபால் துறையில் 3 மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here