அரசியலில் களமிறங்கும் ஐ.ஏ.எஸ்! இளைஞர்களுக்கு முன் உரிமை!
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அரசியலில் நுழைய போவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருந்தது.இந்நிலையில் “அரசியல் பேரவை’’ என்ற பெயரில் வரும் சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.இதுக்குறித்து சென்னையிலுள்ள கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்து சகாயம் கூறியது,அரசியல் மாற்றத்திற்கு பதிலாக சமூக மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வர வேண்டும்.அதனையடுத்து இன்றைய காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான காலம்.இவர் இவ்வாறு இளைஞர்களுக்கு முன் உரிமை கொடுக்கும் விதமாக பேசினார்.
அதனையடுத்து அவர் கூறியது,புதியதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய கூட முடியாமல் இன்றைய சூழல் நிலவுகிறது.இளைஞர்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது “அரசியல் பேரவை” 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.அதில் தமிழக இளைஞர் கட்சி மற்றும் வளமான தமிழக கட்சியுடன் சேர்ந்து இணைந்து போட்டியிடுகிறது என்றார்.
அந்த இரண்டு கட்சிகள் சின்னத்திலும் தங்களது இளைஞர்கள் களம் இறங்குவார்கள் என கூறினார்.நான் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை எனவும் கூறினார்.அதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து “அரசியல் பேரவை” சார்பில் மாணிக்கம் என்பவர் போட்டியிட உள்ளார்.இவர் இப்போதிருக்கும் இளைஞர்களை மோட்டிவேட் செய்யும் விதமாக பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.