துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Photo of author

By Sakthi

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 25 ஆம் நாளிலிருந்து இந்தியாவில் கொரோனா அதிகரித்ததை அடுத்து இந்தியாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இணையதளம் மூலமாக கல்வி பயின்று வந்தார்கள் இதற்கு இடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வந்தது.

2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதலில் இந்தியாவிற்குள் இந்த நோய்த்தொற்று பரவத்தொடங்கியது. ஆனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த தொற்று தீவிரமடைய தொடங்கியதை அடுத்து மத்திய மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்கள்.அதோடு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல கல்லூரிகளில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோய் தொற்று குறைய தொடங்கியதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் என்று அனைத்தும் மெல்ல மெல்ல செயல்பட தொடங்கின. ஆனால் திடீரென்று பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா உருவானது. இதனால் உஷாரான மாநில அரசு 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்தது.

இந்தநிலையில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழ தொடங்கி இருக்கிறது. அதோடு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆங்காங்கே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்தி 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்றுப் பரவல் இருப்பது கண்டு கொள்ளப்பட்டிருக்கிறது.

அதோடு பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இந்த தொற்று பரவியிருப்பது தெரிய வந்திருக்கிறது.இந்த சூழ்நிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தார் அந்த சமயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.