தெலுங்கானா மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில், குண்டலப்பள்ளி மண்டலம், ரங்காரெட்டி நகரைச் சேர்ந்தவர் தான் முரளி. இவறது வயது 35. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முரளி அடிக்கடி செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர்திசையில் பெண்கள் பேசினால் அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார்.
அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில் ராங்கால் மூலமாக நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பினை பெற்றார். மேலும், அந்தப் பெண்ணிடம் மூன்று மாதங்களாக அவர் பேசி கொண்டிருந்தார். பின் அவர்கள் இருவரும் நேரடியாக பார்க்க முடிவு செய்தனர்.
அப்பொழுது அந்த பெண்ணிற்கு திருமணம் ஆன விஷயம் தெரிந்த முரளி அவரை விட்டு தன்னுடன் வந்து விடுமாறு கூறி உள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுத்து விட்டாள். எனவே, அந்த பெண்ணை வசியப்படுத்துவத திட்டமிட்டு பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வசியப்படுத்துவது எப்படி போன்ற வீடியோக்களை பார்த்து வந்துள்ளார்.
பின் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் எலும்புகள் மற்றும் வசியம் செய்யக்கூடிய தேவையான பொருட்களை எடுத்துச் சென்று உள்ளார். மேலும், நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டின் முன் சூனிய பூஜை நடத்தி உள்ளான். காலையில் அந்த பெண் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டின் முன் பூஜை பொருட்கள் இருப்பதை பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
அதற்குப் பிறகு இதனை குறித்து விசாரித்த போது, முரளிதான் அதனை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே, உடனடியாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவரது செல்போனை வைத்து முரளியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்துள்ளனர்.