Crime, District News

புளியந்தோப்பில் ஒரேநாளில் பல கொள்ளை சம்பவம்! ஆய்வாளர் உட்பட பாதிப்பு!

Photo of author

By Hasini

புளியந்தோப்பில் ஒரேநாளில் பல கொள்ளை சம்பவம்! ஆய்வாளர் உட்பட பாதிப்பு!

Hasini

Button

புளியந்தோப்பில் ஒரேநாளில் பல கொள்ளை சம்பவம்! ஆய்வாளர் உட்பட பாதிப்பு!

சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மண்டல உரிமம் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அய்யனார். 40 வயதான இவர் புளியந்தோப்பு வ.உ.சி நகர் 7வது தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தன்னுடைய மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளார். இதன் மதிப்பு மட்டும் ஒன்றரை லட்ச ரூபாய் என்று சொல்லப்படுகிறது. நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது அவரது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தார்.

அதேபோல் அன்று இரவு மட்டும் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த கூரியர் தபால் நிறுவன ஊழியரான நரேஷ்குமார். 19 வயதான இந்த நபரின் மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதே போல் புளியந்தோப்பை சேர்ந்த வஊசி நகரை சேர்ந்தவரான அலெக்சாண்டர் என்பவரின் கடையின் பூட்டை உடைத்து 5 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றனர்.

மர்ம நபர்கள், அதே பகுதியை சேர்ந்த வீரா செட்டித் தெருவை சேர்ந்த சிவராம் என்பவரது அடகு கடையில், 40 வயது மதிக்கத்தக்க நபரின் அடகு கடை ஒன்றிலும் அதேபோல் திருவிக மூன்றாவது தெருவைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் புளியந்தோப்பு  பகுதியை சேர்ந்த சுதாகரன் ஆகியோரின் வீடுகளிலும் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே பகுதியில், நேற்று முன்தினம் ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டு மற்றும் கொலை முயற்சி சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கும்பல் தான் இந்த  கைவரிசையில் ஈடுபட்டனரா அல்லது வெவ்வேறு கும்பல்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

‘பச்சை நிறமே பச்சை நிறமே’ அம்மன் சாரதாவை பாருங்க!! என்ன அழகு..மோனா கிளைமேக்ஸ் மாதிரி இருக்கு!!

Leave a Comment