ஆடி அமாவாசை! சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை!

0
84

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது இந்த கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மதுரை மாவட்டத்தில் இன்று கோவில் அமைந்திருந்தாலும் மலையேறும் அடிவாரமான தாணிப்பாறை பகுதி விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, கடந்த 2015 ஆம் வருடம் முதல் அமாவாசை பவுர்ணமி பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மட்டுமே மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆடி அமாவாசை விழா வருகின்ற எட்டாம் தேதி பக்தர்கள் இன்றி நடைபெற இருக்கிறது. நோய் தொற்று முழுவதுமாக இதுவரையில் கட்டுக்குள் வராத சூழ்நிலையில், கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக வருகின்ற 6 மற்றும் 7 மற்றும் 8ம் தேதிகளில் அதோடு 9 ஆம் தேதியிலும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை என கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே மேலே சொல்லப்பட்ட நான்கு தினங்களில் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதோடு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு வரும் 6ஆம் தேதி பிரதோஷ சிறப்பு பூஜைகளும் எட்டாம் தேதி அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அமாவாசை சிறப்பு பூஜைகளும் வழக்கம்போல நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.