அரசு விதியை மீறிய ராணுவ வீரர்! சேலத்தில் நடைபெற்ற பகீர் சம்பவம்!
மக்களுக்கு முன்னோடியாக இருப்பவர்கள்தான் அரசு ஊழியர்கள். இவர்களே விதியை மீறும் பொழுது மக்களும் அதனையே பின்பற்றுவர். அவ்வாறு தற்பொழுது அரசு பணியில் இருப்பவர்கள் பலர் விதிகளை மீறி வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து தமிழக அரசு தக்க தண்டனை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அனைவரையும் திமுக அரசு கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்காக செயல்பட வேண்டும். ஆனால் பலர் லஞ்சம் வாங்கிக்கொண்டு தங்களது வேலைகளை முடித்து தருகின்றனர். பல சட்டங்கள் கொண்டு வரப்படும் இன்றளவும் இது முடியாமல் தொடர்ந்து கொண்டே உள்ளது. அந்தவகையில் சேலத்தில் ராணுவ வீரரை அரசின் விதிமுறைகளை மீறிய சம்பவம் அதிர்ச்சியளிக்க செய்கிறது.சேலம் அருகே இருக்கும் ஒரு பகுதிதான் மேச்சேரி. இந்த பகுதியில் எருமப்பட்டி என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். முன்னாள் ராணுவ அதிகாரி செல்வராஜ் என்பவர் அப்பகுதியில் பல நாட்களாக பிளாக்கில் மதுபானம் விற்று வந்துள்ளார். இதனை அறிந்த சிலர் போலீசாரிடம் ரகசிய தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் திடீரென்று முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ் வீட்டில் சோதனை நடத்தினர். அப்பொழுது 25 ற்கும் மேற்பட்ட மதுபானங்கள் அவரது வீட்டில் காணப்பட்டது.
இவர் பிளாக்கில் மதுபானம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தற்பொழுது முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபானங்களை பிளாக்கில் விற்கக்கூடாது என்று பல சட்டங்களை இயற்றியுள்ளது. ஆனால் அதனை அரசு ஊழியர்களே கடைபிடிக்க தவறும் பொழுது மக்கள் எந்த வகையில் பின்பற்றுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.இராணுவ வீரரே அரசு விதியை மீறி தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி தற்போது பரபரப்பாக காணப்படுகிறது.