கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆர்ஜித சேவை தரிசனங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் 25 முதல் மீண்டும் ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஜீலை மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் நடந்து வருகின்றது .கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப ஆராதனை,ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவா தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல் 26 முதல் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சகஸ்ரதீப தீப ஆராதனை,ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும். ஆதார் அட்டை எண்ணை உள்ளீடு செய்து தரிசன கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி இந்த சேவா டிக்கெட்டுகளை பெற்று கொள்ள முடியும். இந்த ஆன்லைன் சேவா டிக்கெட்டுகளை பயன்படுத்தி திருமலையில் தங்கும் விடுதிகளையும் புக் செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் திருப்பதி திருமலை ஏழுமலையானை கடந்த புதன் கிழமை 75,078 பேர் சாமி தரிசனம் செய்து 34,674 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ. 4.34 கோடி வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.