விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்!

0
126
A sudden noise heard in the plane! Shocked passengers!
A sudden noise heard in the plane! Shocked passengers!

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்!

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அங்கிருந்து 147 பயணிகளுடன் சென்னை விமானம் ஒன்று வந்தது. அதனை தொடர்ந்து விமானம் நடுவானில் பறந்து  கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி கேட்கப்பட்டது. அதனை அடுத்து விமான பணிப்பெண்களுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமானத்தில் அவசரக் கால  ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் கவுகாத்தியை சேர்ந்த ஹேமநாத் என்பவர் தனது எட்டு வயது பேத்தியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடைய எட்டு வயது பேத்தி தான் விமான இருக்கையில் கீழே உள்ள அவசரகால உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த லைவ் ஜாக்கெட்டை பட்டனை அழுத்தி எடுத்து அதனை அணிந்து கொண்டிருந்தார்.

மேலும் விமான பணிப்பெண்கள் அந்த சிறுமையிடம் விசாரணை செய்து பின்னர் அவசரகால ஒளியை நிறுத்தினார்கள். இதற்கிடையில் விமானத்தில் அவசரகால ஒலி எழுந்தது தொடர்பாக சென்னையில் உள்ள விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சென்னையில் விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய அதிகாரிகள் ஹேமநாத் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அந்த சிறுமி செய்த செயலினால் விமானத்தில் உள்ள பயணிகள் அச்சமடைந்தனர்.

author avatar
Parthipan K