இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

0
131

இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

உத்திரமேரூர் அருகே இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்த தாய் தந்தையை இழந்த டிப்ளமோ பட்டதாரி பெண் நிவேதிதா. இவர் இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து காஞ்சிபுரம் அருகே ஐயங்கார்குளம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் வாயலூர் கிராமத்தை சேர்ந்த பி.இ பட்டதாரி வாலிபரான பிரவீன் குமார் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக நிவேதிதாவை காதலித்து வந்துள்ளார். மேலும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகிய நிலையில் இளம் பெண் நிவேதிதா கர்ப்பம் அடைந்துள்ளார்.

நிவேதிதா தான் கர்ப்பம் அடைந்துள்ளது குறித்து பிரவீன் குமாரிடம் தெரிவிக்க இருவரும் மதுராந்தகம் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்து கர்பத்தை உறுதி செய்துள்ளனர்.இந்நிலையில் பிரவீன் குமார் தனது உறவினருடன் இணைந்து நிவேதிதாவின் கர்ப்பத்தை கலைக்க முயன்று உள்ளனர்.

இதை அறிந்த நிவேதிதா, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறி பிரவீன் குமார் மீது புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நிவேதிதா கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை எனவும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு உண்மையை ஆராய வேண்டும் என கூறிய பிரவீன் குமாரை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே தாய் மற்றும் தந்தையரை இழந்த நிலையில் நிவேதிதா தற்போது கர்ப்பமாகி ஏமாந்து உள்ளதால் அவரது உறவினர்கள் செய்வது அறியாது கலங்கி நிற்கும் காட்சி வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.