30-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
75

மேஷம்

இன்று தங்களுடைய செயலில் பொறுமையும், எச்சரிக்கையும் அவசியம். இன்று முக்கிய முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் செய்யும் வேலைகளில் தவறுகள் உண்டாகும். ஆகவே கவனமாக இருங்கள். கணவன், மனைவிக்கிடையே சந்தேகமில்லாமல் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். உங்களுடைய பொறுப்புகள் அதிகரிப்பதால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்

இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்களுடைய உழைப்பாளர் முன்னேற்றம் அடையக்கூடிய நாளாக இந்த நாள் விளங்கும். உங்களுக்கான இலக்குகளை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். பணி நிமித்தம் காரணமாக பயணமொன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்தப் பயணமானது தங்களுக்கு பயனுள்ளதாக அமையும் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சேமிப்பதற்கும் பணம் வந்து சேரும்.

மிதுனம்

இன்றைய நாள் தங்களுக்கு தகவல் பரிமாற்றத்தால் வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆன்மீகம் தொடர்பான பாடல், சொற்பொழிவு கேட்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆகவே தங்களுக்கு மன அமைதி கிடைக்கும் அலுவலகத்தில் தங்களுடைய திறமையால் வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். ஆகவே மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும். தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு பண வரவு இருக்கும்.

கடகம்

இன்று தாங்கள் ஆன்மீக செயலில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். ஆகவே தங்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். அலுவலகத்தில் நீங்கள் பார்க்கும் வேலை சுமுகமாக அமையாததால் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காதது போல தோன்றலாம். உங்கள் மனைவியிடம் கோபத்தை காட்டாமல் இருக்க வேண்டிய நாள். பணம் தட்டுப்பாடு உண்டாவதால் இன்றைய நாள் சற்று கடினமாக இருப்பதை போல உணர்வீர்கள்.

சிம்மம்

இன்று தாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். ஆகவே உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பயணம் செய்யும்போது சற்றே கவனத்துடன் செயல்படுவது முக்கியம். அலுவலகத்தை பொருத்தவரையில் நீங்கள் பார்க்கும் வேலை சுமுகமாக அமையாததால் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பணப்புழக்கம் சற்று குறைவாகவே காணப்படும்.

கன்னி

இன்று தங்களுக்கு சிறந்த நாளாக விளங்கும். மகிழ்ச்சிகரமான நாளாக இருப்பதால் தங்களுடைய எண்ணங்களிலும், செயல்களிலும் அது பிரதிபலிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். தங்களுடைய சேமிப்பு திட்டங்கள் பூர்த்தியாகும் அளவிற்கு நிதிநிலை அதிகரிக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக அமைவது கடினம் தொழில் உத்தியோகத்தை பொருத்தவரையில் பணியில் வளர்ச்சி குறைந்து காணப்படும் அதிக பணிகள் காரணமாக இன்று நீங்கள் மும்முரமாக செயல்படுவீர்கள். கணவன், மனைவி உறவுக்குள் தங்களுடைய துணையுடன் தொடர்பு கொள்வதில் சில சிக்கல்கள் ஏற்படும். ஆகவே தங்களுடைய மனநிலை பாதிக்கப்படும் இன்று தங்களுடைய நிதிநிலை வளர்ச்சி கரகமாக காணப்படாது.

விருச்சிகம்

இன்றைய நாள் தங்களுடைய செயலில் நேர்மையும், நாணயமும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் உங்களுக்கு எதிரான சூழ்நிலை ஏற்படாது. ஆகவே கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் தங்களுடைய திறமைகளை கையாளும்போது கவனக்குறைவாக இருப்பீர்கள். உடன் பணியாற்றுபவர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பண வரவு திருப்திகரமாக இருக்காது. நிதிநிலை குறைந்து காணப்படும்.

தனுசு

இன்று தங்களுக்கு விருப்பமான பலன்கள் எதுவும் கிடைக்காது. ஆன்மீக நோக்கத்தில் பயணம் செல்ல வேண்டி இருக்கும். கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். அலுவலகத்தில் நீங்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கணவன், மனைவிக்கும் கருத்து வேறுபாடு உண்டாகலாம். பயணம் செல்லும் போது பணப் பற்றாக்குறை ஏற்படலாம். ஆகவே தாங்கள் இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மகரம்

இன்று தங்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். இன்றைய நாளின் விளைவுகள் தங்களுக்கு திருப்தியை வழங்கும். அலுவலகத்தில் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும். பயனுள்ள சேமிப்பு பழக்கத்தை உண்டாக்கி கொள்வீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும் தங்களிடம் ஆர்வம், விருப்பம், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளிட்டவை காணப்படும். அலுவலகத்தில் தங்களுடைய வேலையில் வளர்ச்சி காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அதனை நீங்கள் பயனுள்ள நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள்.

மீனம்

இன்று தங்களுடைய அணுகு முறையில் எதார்த்தமும், ஒழுங்கு முறையும் தேவைப்படுகிறது. அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை மேற்கொள்ளும் போது கவனத்துடன் இருப்பது அவசியம். அப்போதுதான் திறமையுடன் செயல்பட முடியும். தங்களுடைய மனைவியிடம் பேசும் போது வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். நிதிநிலை மகிழ்ச்சியாக இருக்கும். பணத்தை கையாளும் போது கவனமாக இருக்கவும்.