இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பணவரவு கிடைக்கும்!

0
81

மேஷம்

இன்றைய தினம் தங்களுக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். இதுவரையில் வசூலாகாத பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

இன்றைய தினம் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியை காண்பீர்கள். வேலையில் விளைபிக்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தடைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று தங்களுடைய குடும்பத்தினருடன் இருந்த மாற்றுக் கருத்துக்கள் நீங்கும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை வழங்கும். பயணங்களில் வெளிநபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

இன்றைய தினம் தங்களுடைய பொருளாதார நிலை சுமாராக காணப்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வதின் மூலமாக பிரச்சனைகளை தவிர்த்து கொள்ள முடியும். வேலையில் உண்டாகும் பணிச் சுமையை உடன் பணியாற்றுபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். சுப காரியம் கைகூடும்.

சிம்மம்

இன்றைய தினம் தங்களுடைய கோவிலில் லாபம் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செய்ய நேரலாம். வெளிவந்த நட்பு கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீட்டில் மங்கையர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைவாக காணப்படும். வாரிசுகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும். முயற்சிகளில் அணுகூல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

துலாம்

இன்று தாங்கள் எந்தவிதமான செயலிலும் சுறுசுறுப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். வாரிசுகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

விருச்சிகம்

இன்றைய தினம் தங்களுக்கு அதிகாலையில் சுபச் செய்திகள் கிடைத்து மணமகிழ்ச்சி அடைவீர்கள். வாரிசுகளால் தங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு வாரிசுகள் வழியில் சுபச் செய்தியில் வந்து சேரும். தொழிலில் இருந்த மந்த நிலை குறைந்து முன்னேற்றம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் அனுபவ பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை வழங்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்

இன்றைய தினம் தங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். திருமண சுப முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்க்கு மகிழ்ச்சியை வழங்கும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் .

கும்பம்

இன்றைய தினம் தங்களுடைய வீட்டில் சுபச் செலவுகள் உண்டாகும். வாரிசுகள் அனுபவமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தெரியும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும்.

  • மீனம்

இன்றைய தினம் தங்களுக்கு எதிர்பாராத திடீர் வரவு கிடைக்கும். வீட்டில் பெரியவர்களால் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரையில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.