அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!!

0
70

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!!

ஆப்பிள் கம்ப்யூட்டர் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும்.இந்த நிறுவனம் கணினி மற்றும் இன்றி ஐப்பாடு, ஐஃபோன்,போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது.இந்நிலையில்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவைத்தார்.அதில் புதிய ஐபோன்கள்; ஐபோன் 14 மொத்தம் 5 வகைகளாக வெளியாகியுள்ளது.

அதன் பெயர் மற்றும் விலை பின் வருமாறு: ஐபோன் 14 – துவக்க விலை ரூ.79 ஆயிரத்து 900 ஐபோன் 14 பிளஸ் – துவக்க விலை ரூ. 89 ஆயிரத்து 900 ஐபோன் 14 புரோ – துவக்க விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 ஐபோன் 14 புரோ மேக்ஸ் – துவக்க விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 ஐபோன் 14 ரக செல்போன்களின் விலை வரும் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எஸ்.இ. ரகம்; ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எஸ்.இ.ரகத்தில் மொத்தம் 8 நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் வரும் 16 ஆம் தேதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச்களின் விலை ரூ. 29 ஆயிரத்து 900 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 8 ரகம்; அதேபோல் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 8 ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீரிஸ் 8 ரக ஸ்மார்ட் வாட்ச்களின் ஆரம்ப விலை ரூ. 45 ஆயிரத்து 900 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்பட்ஸ்; அதேபோல், ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோ 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏர்பட்ஸ்களில் ஆரம்ப விலை ரூ 26 ஆயிரத்து 900 என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக அறிமுகப்படுத்த இந்த செயலிகள் விரையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K