முதல்வர் தொடர்பாக அவதூறு சுவரொட்டி! பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!

வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அவதூறாக சித்தரிக்கும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தனர். இது குறித்து சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல உதவி பொறியாளர் ராஜ்குமார், சுவரொட்டி ஒட்டிய பிலிப்ராஜ் உள்ளிட்டோரை பிடித்து விசாரித்தனர். அதோடு இதுபோல முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் எச்சரிக்கையையும் மீறி முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக சுவரொட்டைகளை ஒட்டியதால், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் சுவரொட்டியை ஒட்டிய வண்ணாரப்பேட்டையைச் சார்ந்த பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதோடு அவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் இதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், கைப்பேசிகள் உள்ளிட்டவையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிலிப் ராஜ்க்கு சுவரொட்டிகளை சத்தியநாதன் என்பவர் வழங்கியது தெரியவந்தது. அதோடு சிவகாசியில் உள்ள தனியார் அச்சகத்தில் ஐந்தாயிரம் சுவரொட்டிகள் அச்சடித்து கொரியர் மூலமாக சென்னைக்கு கொண்டு வந்த விவகாரமும் தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளருக்கு கிருஷ்ணகுமார் என்பவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் பிலிப்ராஜ், சத்தியநாதன், உள்ளிட்ட மூவரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமாரையும் நேற்று கைது செய்தனர்.

அதோடு கைதான கிருஷ்ணகுமார் அடையாறில் அரசியல் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.