பொதுமக்களே உஷார்!!! உங்கள் மாடுகளை தாக்கும் வட மாநில வைரஸ்! 

பொதுமக்களே உஷார்!!! உங்கள் மாடுகளை தாக்கும் வட மாநில வைரஸ்!

பசு மற்றும் எருமை மாடுகளை தோல் கழலை நோய் தாக்கி வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மாடுகளை தமிழகதிற்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.வட மாநிலங்களில் உள்ள மாடுகளை தோல் கழலை நோய் அதிகமாக தாக்கி வருகிறது, இந்நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நோயானது மாடுகளில் உண்ணிகள் , ஈ போன்ற பூச்சிகள் மூலம் பரவுகிறது, நோய் பரவலை தடுக்க மாட்டு கொட்டகைகள், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமிநாசினிகளை தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு கால்நடைத்துறை சார்பில் வலிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் அதிக அளவில் இல்லை என்றாலும் இந்த நோயை கட்டுப்படுத்த கால்நடைத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்டை மாநிலத்திலிருந்து பசு மற்றும் எருமை மாடுகளை தமிழகத்துக்கு கொண்டு வருவதை தடுப்பதற்கு மாநில எல்லையோரங்களில் தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளுக்கு முறையான சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்த முடியும்.

இயற்கை முறையில் சிகிச்சை மாடுகளின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம், மஞ்சள் ஆகிய பொருட்களை கலந்து உருண்டையாக உருட்டி கொடுத்து வந்தால் மாடுகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சத்துக்கள் கிடைக்கும். இந்நோய் தாக்கிய மாடுகளுக்கு வெற்றிலை, மிளகு, உப்பு, வெல்லம் சிறிது அளவு அரைத்து கலந்து சிறிது சிறிதாக கொடுப்பதன் மூலம் மாடுகள் விரைவில் குணமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

காயங்களுக்கு மஞ்சள், வேப்பங் கொழுந்து, குப்பை மேனி அரைத்து புண்கள் மேல் தடவி வர அவை சீக்கிரம்  ஆறும். மாடுகளுக்கு சோர்வாக தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுகி கால்நடையை பரிசோதித்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.எனவே பொதுமக்கள் தங்கள் மாடுகள் மற்றும் மாட்டு தொழுகைகளை சுத்தமாக வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள், மாடுகளை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள்.