சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5601

ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு

0

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 5 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்குத்
தற்காலிகமாக தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி முதன்மை செயலா் தீ ரஜ்குமாா் அவர்கள் வெளியிட்ட விவரம் என்னவெனில்

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 5 பேர்க்கு தற்காலிக பணி உயர்வு அடிப்படையில் பதவி உயா்வு செய்யப்பட்டுள்ளது.அதன்படி திண்டிவனம் மாவட்ட கல்வி அதிகாரி கே.கிருஷ்ணவேணி அவர்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரியாகவும், சேலம் மாவட்ட கல்வி அதிகாரி ஆா்.மதன்குமாா் அவர்களுக்கு ராணிப்பேட்டை முதன்மை கல்வி அதிகாரியாகவும், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அதிகாரி கே.பாலதண்டாயுதபாணி அவர்களுக்கு தேனி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பதவி உயா்வில் தற்காலிகமாக பணியிடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது

அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அதிகாரி பி.மகேஸ்வரி அவர்களுக்கும் லால்குடி மாவட்ட கல்வி அதிகாரி ஆா்.அறிவழகன் அவர்களுக்கும் தொடக்கக் கல்வி துணை இயக்குநா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர இருவா் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆா்.பூபதி ஆசிரியா் தேர்வு வாரியத் துணை இயக்குநராகவும், அந்தப் பணியிடத்தில் இருந்த ச.செந்தில் முருகன் அவர்கள் திருநெல்வேலி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனா் என அதில் அவர் கூறப்பட்டு உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் – ஐந்து மாநிலத்தை சேர்ந்தவர்கள் கர்நாடாகாவுக்குள் நுழைய தடை

0

கொரோனா நோய் பரவல் தற்போது உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கர்நாடாக மாநிலத்தில் தற்போது 2418 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். வரும் 31ம் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. அப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து கொரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கார்நாடாகாவிற்க்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட எந்த போக்குவரத்தின் வாயிலாகவும் கரநாடாகாவிற்க்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆன்லைன் நீட் பயிற்சி அறிவிப்பு – பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் லிங்க் உள்ளே

கடந்த 201 7ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவு தேர்வு மருத்து படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படுகிறது.

பொதுவாக மே மாதத்தில் நடத்தப்படும் இத்தேர்வுகள் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலில் இருக்கும் பொது முடக்கத்தால் ஜூலை மாதம் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை நீட் தேர்வுக்காக இந்த ஆண்டு பதிவு செய்துள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி இனையதளம் வாயிலாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஜூன் 15-ம் தேதி முதல் துவங்கப்படவிருக்கும் இந்த பயிற்சியை
நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இனையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தினந்தோறும் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என்ற வகையில் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் பயிற்சி பெற விரும்பும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதில் மாணவர்கள் பெயர், மின்னஞ்சல், பள்ளி முகவரி, மாவட்டம் ஆகியவற்றோடு நீட் பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறிய வழக்கில் 5.42 லட்சம் பேர் கைது

0

கொரோனா தொற்று காரணமாக
கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் இன்று வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடித்து வருகிறது.

பெரும்பாலானோர் இந்த போது முடக்கத்தையும் மீறி அவசியமின்றி வெளியே சுற்றியதால் மார்ச் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை அதாவது மே 28 ஆம் தேதி வரை 5.08 லட்சம் வழக்குகள் மூலம் 5.42 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் விதிகளை கடைபிடிக்காத பல வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு அபராதம் விதித்தும் நூதன தண்டனை அளித்தும் எச்சரித்து காவல்த் துறையினர் அனுப்பினர்.

நேற்றுவரை அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை 8.36 கோடி ரூபாய் ஆகும்.

இந்திய ராணுவம் குறித்து தவறான தகவல்! திருமாவளவன் கைதா? ஹச் ராஜா பரபரப்பு தகவல்

0

இந்திய ராணுவம் குறித்து தவறான தகவலை பரப்பிய சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக சீனா இந்திய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்தும் அதற்கு பாஜக தலைமையிலான மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விமர்சனம் செய்யும் வகையில் திருமாவளவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில்,டொனால்ட் ட்ரம்ப் சம்மன் இல்லாமலேஆஜராகத் துடிக்கிறார்.பாகிஸ்தானோடு உரசல்,சீனாவோடுசிக்கல் வரும்போதெல்லாம் பஞ்சாயத்துபண்ண ‘நான்ரெடி நீங்கரெடியா’என்கிறார்?அவர் மோடிக்குஆதரவாகப் பேசுகிறாரா?கிண்டல் பண்ணுகிறாரா?இந்திய-சீன எல்லையிலோ நம்படையினர் ‘திரும்பிபோ’எனபதாகை பிடிக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இத்துடன் இந்திய ராணுவ வீரர்கள் GoBack என்ற பதாகைகளை கையில் பிடித்தவாறு இருக்கும் ஒரு படத்தையும் இணைத்திருந்தார்.

https://twitter.com/thirumaofficial/status/1265944564772122624?s=20

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த பதாகை போலி என்றும்,மோடி மீதுள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்த இவரை கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

H Raja vs Thirumavalavan-News4 Tamil Online Tamil News
H Raja vs Thirumavalavan-News4 Tamil Online Tamil News

இது குறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
இந்த பதாகை போலியானது. மோடி அவர்கள் மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்துள்ள இந்த நபரை அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று ஹச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு நாட்டிற்கு தான், இவர்கள் காதலுக்கு இல்லை – செக்போஸ்ட்டில் நடந்த திடீர் திருமணம்

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் தொழிலாளர்கள், அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து கவலையடைந்தனர்.அதே நேரத்தில் காதலர்களோ எப்பொழுது ஊரடங்கு முடியும் காதலியை சந்திக்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் காத்திருத்தலை தாண்டி கொரோனாவை சற்றும் பொருட்படுத்தாமல் காதலில் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக காதலனும் கேரளா காதலியும்.

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ரத்தினம் செல்வராணி இவர்களின் மகன் பிரதீப். இவர் கேரளாவின் கோட்டயத்தில் பணியாற்றி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காயத்ரி என்ற பெண்ணை காதலித்து சில வருடங்களாக காதலித்து வந்தார். இவர்கள் காதலித்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பெற்றவர்களால் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார் பிரதீப்.

ஊரடங்கு முடிந்து கேரளாவிற்கு சென்று விடலாம் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் தனது காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்தார் பிரதீப். இந்நிலையில் பிரதீப்பும் காயத்திரியும் கைப்பேசி மூலமாக தங்கள் தவிப்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். கேரளாவில் உள்ள கோட்டயத்தில் இருக்கும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து பிரதீப், திருமணத்திற்காக கேரளா செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தபோது பிரதீப்பிற்கு இ-பாஸ் கிடைக்கவில்லை.

மேலும் தமிழக எல்லைப் பகுதியான குமுளி சோதனைச் சாவடி வரை சென்று அங்கிருந்த கேரள அதிகாரிகளிடம் எவ்வளவோ எடுத்துக் கூறி முறையிட்டும் அவர்கள் கேரளாவிற்குள் செல்ல அனுமதி தரவில்லை. இந்நிலையில் வேறு வழியில்லாமல் காயத்ரிக்கு அழைப்பு விடுத்து உடனடியாக தமிழக – கேரள சோதனைச் சாவடிக்கு வரும்படி தெரிவித்தார்.

தனக்காக காத்திருக்கும் காதலனுக்காக காயத்ரி மணப்பெண்ணா தன்னை அலங்கரித்து குமுளி சோதனைச் சாவடிக்கு வந்தார். இருவரும் சோதனைச்சாவடி அருகிலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். இவர்களின் உண்மை காதலை புரிந்து கொண்ட அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்த சிறிய மாரியம்மன் கோயிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து மணமகனின் பெற்றோர் உட்பட சிலரை மட்டும் அழைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து திருமணம் முடித்து வைத்தனர்.

பிறகு மணமக்களை ஆசீர்வதித்து மணமகளை கேரளாவிற்கும், மணமகனை தமிழகத்திற்கும் அனுப்பி வைத்தனர். கொரோனா என்கிற வில்லனை மீறி காதலர்கள் வெற்றிப்பெற்ற செய்தி, ஊரடங்கினால் நேரில் சந்திக்கமுடியாமல் தவிக்கும் உண்மை காதலர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.

இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?

இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் மே 4 முதல் 28 வரை மொத்தம் 25 நாட்கள் வரை அக்னிநட்சத்திரம் நீடிக்கும். கோடை வெயில் சுட்டெறிக்கும் சூழலில் இந்த அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த மாதம் மே நான்காம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழ்நாட்டில் வெயில் படிப்படியாக உயர்ந்தது. பல இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத்(Faranheit) தாண்டி சுட்டெரித்தது.

இந்நிலையில் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது.

கரூர், வேலூர், திருத்தணியில் தலா 105 டிகிரி வெப்பம் பதிவானது. இதனையடுத்து சேலம், பாளையங்கோட்டை, திருச்சி, திருப்பத்துர் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரியும், ஈரோட்டில் 104 டிகிரியும் வெப்பம் நிலவியது.

மதுரை -101
தருமபுரி -101
நாகை -100,

பரங்கிப்பேட்டை -100 என பல இடங்களில் வெயில் நேற்று சதமடித்தது.

இவ்வெயிலின் தாக்கத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர். மேலும் இதே போன்று வெயிலின் தாக்கம் நீடித்தால் புவி வெப்பமயமாகி நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை மக்கள் சந்திக்க நேரிடும் என புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

விபத்து நேரத்தில் லாக் செய்துள்ள போனிலிருந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது எப்படி?

0

ஒவ்வொருவரும் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் மொபைலில் லாக் செய்திருப்பார்கள். அப்படி உள்ளவர்கள் விபத்தில் சிக்கும் போது அவர்களுடைய உறவினர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில் இப்படி பாஸ்வேர்டு போட்டு போனை லாக் செய்து வைத்திருப்பவர்கள் கீழ்கண்டவாறு செய்தால் அவசர நேரத்தில் அவர்களது உறவினர்களுக்கு சுலபமாக தகவல் தெரிவிக்கலாம்.

Phone இல் பாஸ்வோர்ட் போட்டு வைத்திருப்பவர்கள் இதற்காக கட்டாயமாக செய்ய வேண்டியவை.

இதன் மூலமாக போன் லாக் செய்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் விபத்தில் சிக்கி இருக்கும் போது அவர்களது போனிலிருந்து பெற்றோர்,உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனிலிருந்து சுலபமாக தகவல் தெரிவிக்கலாம்.

இதற்காக உங்கள் போனில் உள்ள contact -ல் group என்ற option இருக்கும் அதை open செய்து அதில் ICE Emergency Contact -ல் உங்கள் பெற்றோர் சகோதரர் நண்பர்கள் உள்ளிட்டோரின் நெருக்கமானவர்களின் எண்களை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

அவசர தேவையின் போது உங்கள் போன் லாக்கில் இருக்கும்போது, Lock -ன் கீழே Emergency Calls ஐ கிளிக் செய்தால் நீங்கள் சேவ் செய்து வைத்திருக்கும் எண்கள்
வரும். அந்த எண்ணிற்கு அந்த போனிலிருந்து கால் செய்ய முடியும்.

இதை தெரிந்து வைப்பதுடன் உங்கள் போனிலும் இதை போல பதிவு செய்து வையுங்கள் ஆபத்து காலங்களில் நமக்கு பேருதவியாக இருக்கும்.

திருமண ஆடம்பர செலவுகளை குறைக்கும் ஊரடங்கு திருமணங்கள் – பொதுமக்கள் ஆதரவு

திருமண செலவுகளை குறைக்கவா ? இந்த ஊரடங்கு திருமணங்கள்

கொரானா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதத்திலிருந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இப்பொதுமுடக்கத்தின் போது மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க திருமண சுப நிகழ்ச்சிகளுக்கு மணமக்களுடன் சில பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்து.

இதனால் தமிழ்நாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பல மணமக்களுக்கு எளிமையான முறையில் வீடுகளிலும், கோவில்களிலும் ஒரு சில நபர்கள் மட்டும் கலந்துக்கொள்ள திருமணம் நடக்கிறது. திருமணம் கலந்து கொள்ள முடியாதோர் வீடியோ அழைப்பில் (Video call)லில் திருமணத்தை பார்த்துவிட்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

எளிமையான முறையில் நடக்கும் இத்திருமணங்களை வரவேற்றாலும், பெண் அல்லது பிள்ளை வீட்டார் திருமண செலவை குறைக்கவும், கல்யாண செலவுகள் பற்றின உறவினர்களின் கேள்விகளிலிருந்து தப்பிக்கவுமே இப்படி எளிமையாக திருமணத்தை நடத்தி தப்பித்துக்கொள்கின்றனர் என ஒரு சில தரப்பினர் கூறியுள்ளனர்.

பொதுவாக “வீட்டைக் கட்டி பார், கல்யாணம் செய்து பார்” என்ற பழமொழிக்கேற்ப தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யலாம் என்று பெற்றவர்கள் முடிவெடுக்கும்பொழுது அதில் உள்ள ஆனந்தம் தெரியாமல் கல்யாண செலவு என்கிற பாரம் தெரிகிறது. கல்யாணம் முடிந்த பிறகும் அந்த பாரத்தை சுமக்கும் நிலையால் நிம்மதி இழந்து மறுபடியும் இயங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆனால் இவ்வாறு எளிமையாக நடக்கும் திருமணத்தினால் பெற்றவர்களும் மணமக்களும் கல்யாண சுமையை உடைத்து ஆனந்தம் கொள்கின்றனர்.

உறவினர் வாய்ச்சொல்லுக்கு பயப்படாமல் நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்காக நடைபெறும் எளிய திருமணங்கள் வரவேற்கத்தக்கது எனவும் வருங்காலங்களில் இல்லற நிம்மதியை கெடுக்கும் ஆடம்பர செலவுகளை தவிர்த்து எளிமையான முறையில் திருமணங்கள் நடக்கவேண்டும் எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் தவறினாலும் சரி தங்கள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த காத்திருப்போம் எனவும் ஒரு சில மணமக்கள் உள்ளனர்.

பெண் பார்க்கும் வேளையில் இப்படி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு காலம் முழுவதும் தங்களுக்கு கல்யாணம் நடைபெறாதா ? கனவாக போகிவிடுமா ? என்ற கவலையுடனும் 90களில் பிறந்த முரட்டு சிங்கிள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பகுதியை தங்கள் நாட்டுடன் இனைத்து வரைபடம் வெளியிட்ட நேபாளம்!

0

இந்தியாவின் உத்தராகண்ட் எல்லையில் உள்ள சிறிய நாடு நேபாள். மிக சிறிய நாடான நேபாளம் சமீபத்தில் வெளியிட்ட தங்கள் நாட்டின் வரைபடத்தில் இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை இணைத்து தங்களது பகுதி என்று வெளியிட்டது.

மாற்றம் செய்த இந்த நாட்டு வரைபடத்து ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர தீர்மானித்திருந்தனர். இதற்கு இந்தியா தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போதைக்கு இதனை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ள பொவதில்லை என அறிவித்துள்ள நேபாள பிரதமர் கே.பி. ஒலி, எதிர்க்கட்சிகளின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் உருவானதன் பின்னணி என்ன?

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக் – தர்சுலா இடையிலான 80 கிலோ மீட்டர் தொலைவிலான சாலையை கடந்த மே 8 ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். இந்த நிகழ்வு நடைபெற்றவுடன் நேபாளத்துக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ராவுக்கு நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவலி எதிர்ப்பு தெரிவித்து சம்மன் அனுப்பி இருந்தார்.

கலாபானி இந்தியாவிற்க்கு சொந்தமான பகுதி. ஆனால் அதனை நேபாளம் தன்னுடையது என கூறி வருகிறது. இந்தப் பகுதி சீனாவின் திபெத் பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வழியை வர்த்தகத்திற்கு சீனா பயன்படுத்தி வருகிறது. இந்த வழி மூலம் கைலாஷ், மானசரோவர் செல்வதற்கும் யாத்திரிகர்கள் பயன்படுத்துகின்றனர். கைலாஷ், மானசரோவர் செல்லவே இந்த சாலையை இந்தியா அமைத்துள்ளது.

இதனால் தான் தற்போது தேவையில்லாமல் நேபளம் இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது.