சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5872

உலகக்கோப்பை Vs தேநீர் கோப்பை – பாகிஸ்தானுக்கு அபிநந்தன் வழங்கிய தேநீர் கோப்பை

0

#worldcup2019 #INDVsPAK #Abinandhan #Vsevenpictures

உலகக்கோப்பை Vs தேநீர் கோப்பை – பாகிஸ்தானுக்கு அபிநந்தன் வழங்கிய தேநீர் கோப்பை

பாக் தம்பி உனக்கு டீ கப் மட்டும் தான்

இந்தியாவில் கோடை வெயிலை விட பொறி பறந்தது நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்

மான்செஸ்டர் மழையால் நிறைய போட்டிகள் நிறுத்தப்பட நேற்று பேட்ஸ்மேன்கள் களம் இறங்கும் வரை யாருக்கும் நம்பிக்கையில்லை … சென்னை மற்றும் இந்திய வானிலையாளர்கள் மான்செஸ்டர் ரேடரில் கண் வைத்திருந்தனர் ….

இந்தியரின் தேசப்பற்று அதிகரிப்பது சுதந்திரதினம் , குடியரசு தினம் மற்றும் இந்திய பாகிஸ்தான் மேட்ச் நடக்கும் தினம் … பாகிஸ்தானின் விளம்பர நிறுவனமொன்று #BringTheCupHome என்று ஹேஷ்டேகுடன் அபிநந்தன் போன்ற ஒருவரை வைத்து விளம்பரம் வெளியிட பரபரப்பானது இரண்டு நாடுகளும் … தகுந்த பதிலடியாய் இந்தியாவின் V செவன் பிக்சர்ஸ் நிறுவனம் மகனைப் புரிந்து கொள்ள தந்தைக்கு ஒரு நாள் போதுமென்று தந்தையர் தின வீடியோவாய் வெளியிட்டது .

மோடிஜீ ஆளில்லா இடத்தில் விட்ட ஏவுகணை போல் இங்கும் அங்குமாய் பறந்தன மீம்கள் …. உலகக் கோப்பையில் 7 வது முறையாக தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான் வழக்கம் போல் . மழையால் ஆட்டம் அங்கங்கு தடைப்பட்டாலும் கோலி தவறான பௌலிங் வரிசையைத் தேர்ந்தெடுத்ததையும் வினாடிப் பொழுதில் தல தோனி அவுட் ஆனாலும் 89 ரன் வித்தியாசத்தில் உலக அரங்கில் வென்று நின்றது இந்தியா … !

இன்னும் வளரட்டும் இந்தியரின் தேசப்பற்று … பாகிஸ்தான் நல்ல பரிசு தந்தது தந்தையர் தினத்தில் … பாகிஸ்தான் சகோதரர்களே அபிநந்தனின் டீ கப்பை பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள் …. அதுவும் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமே .

செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி

0

செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி

சென்னையில் வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சம் . ஹோட்டல்களில் மதிய உணவில்லை ஐடி கம்பெனிகளில் தண்ணீர் இல்லை. ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யக்கோருகின்றனர். ஏரிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்ததால் வந்த அவலம் தான் இது. எதிர்பார்த்த பருவமழையும் பெப்பே காட்டி விட கடலோர அடுக்குமாடிக் குடியிருப்புகள் தினம் தினம் காலியாகின்றன. ஆனால் கடந்த இருபது நாட்களாய் சென்னை தெற்குப் பகுதி குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தில் நாளுக்கு நாள் வலுக்கிறது ஏரி காப்போம் ஏரி காப்போம் சிட்லபாக்கம் ஏரி காப்போம் எனும் முழக்கம்.

தங்களின் வாழ்வாதாரமான சிட்லபாக்கம் ஏரியைக் காக்க 4 வயது சிறுவரில் ஆரம்பித்து 80 வயது இளைஞர் வரை உழைக்கின்றனர். சிட்லபாக்க்கம் ரைசிங் என்ற தன்னார்வ அமைப்பு முன்னெடுத்த இந்த ஏரி தூர் வாரும் நமக்கு நாமே உத்தி இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த மூன்று நான்கு வருடங்களாய் பருவமழைக் காலத்தில் தெருவெல்லாம் வீடெல்லாம் சேலையூர் ஏரியின் உபரி நீரால் நிரம்பி அவதிப் பட்டு வந்த சிட்லபாக்கம் இன்று தண்ணீர் இன்றித் தவிக்கிறது . இனியும் அரசை நம்பிப் பயனில்லை என்று சிட்லபாக்கம் ரைசிங் குழுவினர் தானே களத்தில் இறங்கினர்.

முகப்புத்தகத்தில் விடப்பட்ட அழைப்புகளும் பதிவிட்ட வீடியோக்களும் நிழற்படங்களும் ஆர்வத்தைத் தூண்ட இன்று அந்த ஊரே ஏரியை தூர்வார இறங்கியிருக்கிறது. அதிகாலை 6 மணி முதல் வேலை ஆரம்பமாகிறது. அலுவலகம் செல்வோர் 8 மணியுடன் முடித்துக் கொள்ள மீதி நேரங்களில் பெண்களும் பணி ஓய்வு பெற்றவர்களும் தொடர்கின்றனர் பிளாஸ்டிக் பாட்டில்கள் பைகள் அனைத்தும் அகற்றப் படுகின்றன. இத்துடன் கருவேல மரங்களும் அழிக்கப்பட மீட்கப் படுவோம் என்ற ஆனந்தத்தில் இருக்கிறது எங்கள் ஏரி . சிட்லபாக்கம் ரைசிங் குழுவினரின் கோஷமே

Chennai Water Issue-News4 Tamil Online Tamil News Channel
Chennai Water Issue-News4 Tamil Online Tamil News Channel

ஏரி காப்போம் ஏரி காப்போம் சிட்லபாக்கம் ஏரி காப்போம் …

தூர்வாரு தூர்வாரு சீக்கிரமாத் தூர்வாரு

செஞ்சுக்கிறோம் செஞ்சுக்கிறோம் – நாங்களே செஞ்சுக்கிறோம் ….

இவ்வாறு சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படின் சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லவே இல்லை இனி வரும் காலங்களில் .

சிட்லபாக்கம் மக்கள் காத்திருக்கின்றனர். அரசியல்வாதிகளே ஓட்டுக் கேட்க வாருங்கள். அப்போது செஞ்சிருவோம் செஞ்சிருவோம் உங்கள வச்சி செஞ்சிருவோம்.

இதுவரை ஆண்ட மற்றும் தற்போது ஆளும் எந்த அரசியல் கட்சியும் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் சரியான நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் விட்டதால் தான் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீர் வீணாக கடலில் கலந்து தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இனியும் நீர் மேலாண்மை பற்றி இந்த அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா என்ற நம்பிக்கையில்லாமல் சென்னை சிட்லபாக்கம் பகுதி மக்கள் தானாகவே ஏரியை தூர் வாரும் செயலில் இறங்கியது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க எங்களது News4 Tamil முகநூல் பக்கத்தையும் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடருங்கள்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல்

0

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல்

இன்று(ஜூன்,16) மான்செஸ்டரில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் வழக்கம்போல் மழை குறிக்கிடுமா என இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்ததுடன் உள்ளனர்.

12ஆவது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது.  இதில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை 21 போட்டிகள் நடந்துள்ளன. இந்தியா விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களிலும் இரண்டில் வெற்றியும் ஒரு போட்டி மழையால் ரத்தானது. தென் ஆப்பிரிக்கவுடனான முதல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது லீக் ஆட்டதில் 36 ரன்கள் வித்தியாசத்திலும்  வெற்றிப்பெற்றது. நியூசிலாந்துடனான போட்டியில்தான் மழைக்குறிக்கிட்டதால் ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்தானது.

பாகிஸ்தான் அணியானது இத்தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தொடரின் குறைந்தப்பட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற பெயர் பாகிஸ்தான் அணிக்கே சொந்தம். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் தோல்வி, இங்கிலாந்து அணியுடன் வெற்றி மற்றும் இலங்கையுடனான போட்டி மழையால் ரத்து என விளையாடிய பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் மழை குறுக்கீடு அதிகம் இருக்கும் என தெரிகிறது. இதுவரை இத்தொடரில் நான்கு போட்டிகள் மழையால் ரத்தானது . இலங்கை-பாகிஸ்தான், இலங்கை-வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா  மற்றும் இந்தியா-நியூசிலாந்து ஆகிய போட்டிகள் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய 6 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகக்கோப்பை அரங்கில் இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் அணி உள்ளது. பவுலிங்கில் முகமது ஆமிர் மிரட்ட காத்திருக்கிறார். இவருடன் வகாப் ரியாஸ் கைகோர்க்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு தொல்லை தான். அப்ரிதி, ஹசன் அலியும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக அமையலாம்.

இந்திய அணி வீரர் ஷிகர் தவான் காயத்தால் அவதிப்படுவதால் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் ராகுல் நல்ல அடித்தளம் அமைக்க முயற்சிக்க வேண்டும். கேப்டன் கோலி வழக்கமான பார்மை தொடர்ந்தால் சிறந்தது. நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் துவக்க வீரராக செல்வதால் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தோனி, பாண்ட்யா, தங்களின் சிறப்பான பினிஷிங்கை தொடர வேண்டும். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், பும்ரா மீண்டும் அசத்தலாம். சுழலில் சகால் இடம் உறுதி. ஆனால் குல்தீப்பிற்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெறுவார் என தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி அங்கு காலநிலை சாதகமான நிலையில் இருப்பதால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க எங்களது News4 Tamil முகநூல் பக்கத்தையும் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடருங்கள்.

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்

0

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகியான பன்னீர் மற்றும் அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார்  என்பவரும் வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் வீடு அமைந்திருக்கும் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற இளைஞர் கண்டித்ததால் அவர் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கும் சாட்சியாக இருந்த விக்னேஷ் பெரிதும் உதவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர், உறவினர் வல்லரசு ஆகிய மூவரும் விக்னேஷை எப்படியாவது பழிவாங்க திட்டமிட்டனர். மேலும் அதுமட்டுமின்றி இவர்கள் ஏ.குறவன்குப்பத்தில் வாழும் விக்னேஷின் உறவினர் மகளான கல்லூரி மாணவி ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஏற்கனவே விக்னேஷுக்கும், ராதிகாவுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் முடிவு செய்திருந்த நிலையில், அந்த திருமணத்தை நடக்க விட மாட்டோம் என்றும் இவர்கள் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதிய வேளையில் நீலகண்டனின் வீட்டுக்கு சென்ற பன்னீர், பிரேம்குமார், வல்லரசு ஆகியோர் ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறி, அந்த படத்தையும் அவர்களிடம் காட்டியுள்ளனர். இத்துடன் முடியாமல் மேலும் அந்த மாணவி திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்துள்ள விக்னேஷையும் கொலை செய்யப்போவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த மாணவி ராதிகா தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வீணங்கேணி என்ற இடத்தில் விக்னேஷ்யும் அடித்து கொலை செய்து, அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். பிரேம்குமார் தலைமையிலான நாடகக் காதல் கும்பல் தான் விக்னேஷை கொடூரமாக படுகொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அனைவரும் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது போன்ற நாடக காதல் கும்பலின் அட்டகாசத்தால் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்றும் பகிரங்கமாகவே விக்னேஷ் மரணத்துக்குக் காரணம் விசிகவைச் சேர்ந்த நிர்வாகி தான் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நெய்வேலி அருகே குறவன்குப்பன் கிராமத்தில் கல்லூரி மாணவி ராதிகாவும், அவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்த விக்னேஷ் என்பவரும் தற்கொலை செய்துகொண்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அந்த இரு உயிர்களும் பலியாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தன் கட்சி நிர்வாகியை கண்டித்துள்ளார். மேலும் அரசியல் ஆதாயத்துக்காக இப்படிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்த அரசும் அதிகாரிகளும் இடம்கொடுத்துவிடக் கூடாது. அதேபோல சமூக வலைதளங்கள் ஆக்கபூர்வச் செயல்களுக்குப் பதிலாக சமூக சீர்கேடுகளுக்குப் பயன்படுவது வேதனையளிக்கிறது. 

முகநூல் பக்கங்களில் தாறுமாறாகப் பதிவுகள் வெளியிடுவது, புகைப்படங்கள் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு, அதனால் பல்வேறு சமூகச் சிக்கல்கள் எழுகின்றன. வாழ வேண்டிய பருவத்தில் 2 பேர் பலியாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பரவிவரும் தீங்காக சமூக வலைதளக் கருத்துகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள திருமாவளவன், மத்திய அரசு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக அதற்கான உரிய வரையறைகளை வகுக்க வேண்டும் என்றும், சமூக சிக்கல்கள் எழாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை வரையறுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அரபு நாடுகளில் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகுந்த கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்த அவர், அங்கு ஆபாச வலைதளங்களைப் பயன்படுத்த முடியாத அளவு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அதை ஏன் இந்திய அரசு பின்பற்றக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

சில காலங்களுக்கு முன்பு பொது மேடையில் பேசிய திருமாவளவன் தங்கள் கட்சியினரிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாகவும் அதனால் தான் மாற்று சமுதாய பெண்கள் அவர்களை தேடி வருவதாகவும் பேசி இருந்தார். இப்படி பேசியது அந்த கட்சி இளைஞர்களை தூண்டி விட்டு அவர்கள் விருப்பம் இல்லாத பெண்களை விரட்டி விரட்டி காதலை ஏற்க சொல்லி தொந்தரவு செய்யவும், அவர்கள் நாடக காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது மற்றும் அவர்கள் மீது ரசாயன அமிலம் வீசுவது போன்றவற்றிற்கும் காரணமாக இருக்கிறது.

செய்வதை எல்லாம் செய்து விட்டு தற்போது நல்லவர் வேஷம் போட்டு பேசியுள்ளது பொது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா?

0

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் மாற்றமா? அடுத்த தலைவர் முக்குலத்தோரா? வன்னியரா?

மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் படு தோல்வியை அடைந்துள்ளது.இதனையடுத்து நடைபெற உள்ளசட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், தோல்விக்கான காரணங்களை ஆராயும் விதமாகவும் ஒவ்வொரு கட்சியும் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் அந்த புதிய தலைவர் என்பது தான் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் விவாதமாக மாறியிருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக பதவியேற்ற பின் அவர் வகித்த அந்த பதவிக்கு தமிழிசை சௌந்தராஜன் நியமிக்கப்பட்டார். பொன்.ராதாகிருஷ்ணன் வகித்த அந்தப் பதவி காலத்தின் மீதமிருக்கும் நாட்களையும் நிறைவு செய்த தமிழிசை சௌந்தராஜன் மேலும் இரண்டாவது முறையாகவும் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழிசை சௌந்தராஜன் வகித்து வரும் பதவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிற நிலையில் அடுத்த தலைவரை யாரை நியமிக்கலாம் என பாஜக தலைமை ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையில் அடுத்த தமிழக பிஜேபி தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் போன்றவர்களின் பெயர்கள் தற்போது ஆலோசனையில் உள்ளதாக கூறுகின்றனர். கருப்பு முருகானந்தம், பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். அவரை தலைவர் ஆக்குவதற்கும் பொன்னாரை தலைவர் ஆக்குவதற்கும் ஒன்று தான் என நினைக்கிறதாம் பிஜேபி தலைமை.

இந்த மாதிரி குழப்பங்களால் தலைவர் பதவிக்கான பட்டியலில் அடுத்து இடம்பிடித்துள்ளவர் நயினார் நாகேந்திரன். இவர் அதிமுகவிலிருந்து ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுவரை தமிழக பிஜேபி தலைமையில் தொடர்ந்து நாடார் சமூகத்தினர் முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், அடுத்து முக்குலத்தோர் சமூகத்தினரை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக தலைமை. மேலும் அதிமுகவில் நீண்ட அரசியல் கள அனுபவம் உள்ளவர், பண பலம் உள்ளவர் என்ற அடிப்படையிலும் நயினார் நாகேந்திரன் தான் தலைவர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் உள்ளார்.
நயினார் நாகேந்திரன் இப்போதுதான் வந்தவர் அதனால் அவருக்கு பாஜக மாநில தலைவர் பதவி கொடுக்கலாமா? என்றும் சில எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன.

தொடர்ந்து நாடார் சமூகத்தினரே தமிழக பாஜக தலைமை பதவி வகித்ததால் கட்சியுள்ளயே நாடார் சாதி அரசியல் ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக உட்கட்சி பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதனால் இந்த முறை மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத படுகிறது. அதில் முக்குலத்தோருக்கு வாய்ப்பு கிடைக்குமா? வன்னியர் சமுதயத்தினருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த தமிழக பாஜக தலைமை மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே நடக்குமா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடக்குமா? என்பதும் கேள்வியாகவே உள்ளது.

தொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள்

0

தொடரும் தலித் இளைஞர்களின் அட்டூழியம் பலியாகும் அப்பாவி பெண்கள்

நாடக காதலுக்கு சம்மதிக்காதா கல்லூரி மாணவி குறித்து தலித் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் பொது மக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலியில் உள்ள குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவரான ராதிகா கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்த மாணவியை குறித்து தவறான தகவலை அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற தலித் இளைஞர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த மாணவி ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்களும், கிராமத்தில் உள்ள பொது மக்களும் இந்த தற்கொலைக்கு காரணமான பிரேம்குமார் வீட்டை அடித்து உடைத்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பந்தபட்ட இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு கலவரம் ஏற்படும் அளவிற்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த அவரது அத்தை மகன் விக்னேஷ் என்பவரும் ராதிகா இறந்த செய்தி கேட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம்கள் குறித்து பாதிக்கபட்டவர்களான விக்னேஷின் தந்தையும், ராதிகாவின் தந்தையும் தனித்தனியாக மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த நிலையில் தற்கொலைக்கு காரணமான அந்த இளைஞர் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள பிரேம்குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், ராதிகா மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவி ராதிகா மற்றும் விக்னேஷ் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்கு கலவரம் ஏற்படும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் குறவன்குப்பம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தன்னை காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திலகவதி என்ற மாணவியை தலித் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்தார். கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் நோக்கில் தொடர்ந்து இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி இளவரசன் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடிய புதிய புரட்சியாளர்களை வெளுத்து வாங்கும் மருத்துவர் ராமதாஸ்

0

தருமபுரி இளவரசன் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடிய புதிய புரட்சியாளர்களை வெளுத்து வாங்கும் மருத்துவர் ராமதாஸ்

தருமபுரியில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளவரசன் என்ற தலித் இளைஞரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்து விட்டனர் என்று அந்த சமுதாயத்தின் மீதும் பாமகவின் மீதும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன.

இந்நிலையில் இந்த இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் இது கொலையல்ல என்றும் காதல் தோல்வியால் நடந்த தற்கொலை என்றும் தனது அறிக்கையை சமர்ப்பித்து இந்த கற்பனை கதைகளுக்கெல்லாம் முற்று புள்ளி வைத்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சம்பவம் குறித்து தேவையில்லாத கட்டுகதைகளை பரப்பிய சுயநல அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் கூறியிருக்கிறது. விசாரணை ஆணையத்தின் இத்தீர்ப்பு பல ஆண்டுகளாக கட்டவிழ்க்கப்பட்டு வந்த கதைகளுக்கு முடிவு கட்டியுள்ளது.

தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை, அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என இருமுறை நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்விலும், காவல்துறை விசாரணையிலும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இளவரசனின் மரணத்தில் அரசியல் லாபம் தேடத் துடித்த திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மனசாட்சியை மரணிக்கச் செய்து விட்டு, இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதிவிசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையம் தான் விரிவான விசாரணைக்குப் பிறகு தருமபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை; மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில், தி இந்து குழுமத்தின் பிரண்ட்லைன் இதழ் இதுகுறித்த விவரங்களை சிறப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

தருமபுரி மருத்துவமனையில் இரு முறை செய்யப்பட்ட இளவரசனின் உடற்கூறு ஆய்விலும் ‘‘வேகமாக சென்ற தொடர்வண்டியின் பக்கவாட்டுப் பகுதி மோதியதில் அவரது இடதுகையில் காயம் ஏற்பட்டிருக்கலாம்; தலையில் தொடர்வண்டி மோதியதால் தான் அவர் உயிரிழந்துள்ளார்’’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இறப்பதற்கு முன் அவர் மது அருந்தியிருந்தார். மதுவில் உள்ள எத்தில் ஆல்கஹால் என்ற போதைப்பொருள் மட்டும் தான் அவரது உள் உறு-ப்புகளில் காணப்பட்டதாகவும், விஷத்தன்மையுடைய வேறு பொருட்கள் எதுவும் அவரது உடலில் இல்லை என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி சிங்காரவேலு, இது சந்தேகத்திற்கிடமின்றி தற்கொலை தான் என்று கூறியுள்ளார்.

இளவரசனுக்கு நீண்டநாட்களாகவே தற்கொலை சிந்தனை இருந்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் ஒருமுறை தமது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதையும் நீதிபதி அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் காவல்துறையினர் மீது கூறப்பட்ட அவதூறுகளை கண்டித்துள்ள நீதியரசர் சிங்காரவேலு, சம்பவம் நடந்த போது தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கார்க்கின் செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார். நீதியரசர் சிங்காரவேலு அறிக்கை மூலம் பா.ம.க. மீது சுமத்தப்பட்ட பெரும்பழி துடைக்கப்பட்டிருக்கிறது.

இளவரசனின் உயிரிழப்பு வேதனையளிக்கும் துயரமான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரது மரணம் தொடர்பான விஷயத்தில் செய்யப்பட்ட அரசியல் மிகவும் அருவருக்கத்தக்கது. திமுகவில் தொடங்கி இப்போது அதன் கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்தன. தங்களின் அரசியல் பசியை தீர்த்துக் கொள்ள இளவரசனின் மரணம் தான் அவர்களுக்கு உணவாக மாறியது. பாட்டாளி மக்கள் கட்சி மீது பழிச்சொல் எனும் அம்புகளை அடுக்கடுக்காக வீசினார்கள். ஊடகங்களும் இந்த விஷயத்தில் உண்மையைக் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. மாறாக, அரசியல் கட்சிகளின் பழிகளுக்கு தப்புத்தாளங்களைப் போட்டன. தி இந்து உள்ளிட்ட பெரும்பாலான பத்திரிகைகள் நடுநிலையை நசுக்கி விட்டு, பொய்யை மூலதனமாக்கி பிழைப்பு நடத்தின. மொத்தத்தில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் புதிய போலி புரட்சியாளர் வேடம் கட்டி ஆடின.

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் பா.ம.க. மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா?

இளவரசன் தற்கொலையை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் சாதியை முதலீடாகக் கொண்டு அரசியல் செய்யும் சில கும்பல்களுக்கும், அவர்களை திரைமறைவிலிருந்து இயக்குபவர்களுக்கும் இருந்ததே தவிர இளவரசனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் இளவரசனை அவர்கள் பலி கொடுத்திருக்க மாட்டார்கள்; வாழ வைத்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை நடத்துவதே பெரும் சுமையாக மாறி விட்ட நிலையில், தமக்கு சென்னையில் ஏதாவது ஒரு வேலை வாங்கித் தரும்படி தமது சமுதாய அரசியல் தலைவரிடம் இளவரசன் மன்றாடியுள்ளார்.

ஆனால், இளவரசன் வாழ்வதை விட அவரை வைத்து தாம் வாழ வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்த அந்த தலைவர், இளவரசனை வைத்துக் கொண்டு தமக்குத் தேவையான விஷயங்களை சாதித்துக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் திட்டி விரட்டியடித்தார். அப்போது தான் அவரது மனதில் தற்கொலை எண்ணம் தலைதூக்கியது. உடனடியாக அந்தத் தலைவரின் அலுவலகத்திலிருந்து தாம் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு வந்து தமது இடது கை மணிக்கட்டை பிளேடால் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதன்பிறகும் இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் தான் இருந்துள்ளார். இது அவரை இயக்கிய பலருக்கு தெரிந்து இருந்திருக்கிறது. இளவரசனையும், அவரது மரணத்தையும் வைத்து ஆதாயம் தேட முயன்றவர்கள், மனசாட்சியுடன் செயல்பட்டு, அவருக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்திருந்தால், தற்கொலையை தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தான் இளவரசனின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அது குறித்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். தற்கொலை திட்டத்தைக் கைவிட்டு விட்டு வீடு திரும்பும்படி, அறிவழகன் என்ற உறவினர் தொலைபேசியில் கேட்டுக் கொண்ட போது, தாம் அளவுக்கு அதிகமாக குடித்திருப்பதாகவும், இந்த நிலையில் தம்மால் வீட்டுக்கு வர இயலாது என்றும் கூறியிருக்கிறார். அதன்பின்னர், சில மணி நேரங்கள் கழித்து தான், அவர் தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்து கொண்டார் என்ற போதிலும், அவரை காப்பாற்ற அவரது உறவினர்களோ, நண்பர்களோ முயற்சி செய்யவில்லை. இளவரசனின் தற்கொலை காவல்துறையினருக்கு தெரியும் முன்பாகவே அவரது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு தெரிந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், இளவரசனின் மறைவுக்காக வருந்தவில்லை; மாறாக அவரிடம் இருந்த தற்கொலைக் கடிதம் உள்ளிட்ட ஆதாரங்களை களைந்து, இளவரசன் கொலை செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் தான் ஆர்வம் காட்டினர். அந்த நேரத்தில் அவரை இயக்கியவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்கு துணையாக இருப்பதைப் போல நடித்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல், அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக உண்மையை மறைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்துவதை கைவிட்டு நேர்மையான அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரசன்னாவை தொடர்ந்து சிக்கிய சிம்லா முத்துசோழன் அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்

0

பிரசன்னாவை தொடர்ந்து சிக்கிய சிம்லா முத்துசோழன் அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்

மக்களவை தேர்தல் ஆரம்பித்தது முதல் திமுக தலைவர்கள் தொடர்ச்சியாக எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் திமுக பேச்சாளரான தமிழன் பிரசன்னா குறித்த தவறான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியிலும் கட்சியினரிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையத்தில் வெளியான இந்த வீடியோ பற்றி கருத்து கூறிய பிரசன்னா அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லையென்றும் அது தனக்கு பிடிக்காதவர்கள் சிலர் வேண்டுமென்றே பரப்பிய பொய் செய்தி என்றும் கூறி மறுத்திருந்தார்.இவர் மறுப்பு தெரிவித்திருந்தாலும் திமுகவை விமர்சனம் செய்வதற்கு எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டனர்.

இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநிலங்களில் செயல்படுத்த நினைக்கும் புதிய மும்மொழி கொள்கையில் தமிழகத்தில் கட்டாயமாக இந்தியை படிக்க வேண்டும் என்று திணிப்பதாக குற்றம் சாட்டி வந்தார். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் இந்தியை திணிக்க நினைத்தால் திமுக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் இந்திக்கு எதிரான பிரச்சாரத்தை முன் மொழிந்த நேரத்தில் தற்போது இந்த விவகாரம் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.இதில் குறிப்பாக ஸ்டாலின் மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினையும் திமுகவினரையும் பொதுமக்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இதுமட்டுமில்லாமல் திமுகவினர் 45க்கும் மேற்பட்ட  இந்தி கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை நடத்தி வருவதாக பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஆதாரத்துடன் விமர்சனம் செய்துள்ளனர்.

இவ்வாறு ஸ்டாலின் ஆரம்பித்தது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளதால் அவரது கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் நபர்கள் விவாதத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து R. K நகரில் போட்டியிட்ட சிம்லா முத்துசோழனும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தன்னுடைய மகன் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று மகனின் கல்வி சான்றிதழுடன் பதிவிட்டிருந்தார். இதில் அவரது மகன் இந்தியும் படித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

Prasanna and simla muthuchozhan issues in dmk-news4 tamil online tamil news today

இந்தியை தொடர்ந்து எதிர்த்து வரும் திமுகவின் முக்கிய நிர்வாகியான இவரது மகன் இந்தி படித்துள்ள தகவலை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதில் திமுகவினர் குழந்தைகள் இந்தி கற்கலாம், ஏழை எளிய மக்கள் இந்தியை படிக்கக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்த பதிவினை நீக்க சொல்லி திமுக தலைமை சார்பாக சிம்லா முத்துசோழனுக்கு அறிவுறுத்தியுள்ளதால் அவர் பெரும் சிக்கலில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது நடந்து வரும் இந்த நிகழ்வுகளால் தொடர்ந்து இந்தியை எதிர்த்து அரசியல் செய்து வந்த திமுகவின் இரட்டை நிலைப்பாடு அவர்களின் அரசியல் சூழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று பொதுமக்களே விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

திமுக தலைவரான ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் இந்தி படிக்கலாம், மேலும் பணத்திற்காக இவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை சொல்லி கொடுக்கலாம்.ஆனால் எழை, நடுத்தர மக்கள் இந்தியை படிக்க கூடாதா? என தற்போது அனைவரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதனை சமாளிக்க முடியாமல் திமுகவினர் திணறி வருகின்றனர்.

கடந்த காலங்களை போல இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி திமுக ஆட்சியை பிடித்தது போல் தற்போதும் இந்தி எதிர்ப்பு பிரசாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஸ்டாலின் எதிர்பார்த்த நிலையில் தற்போது அது அவருக்கு பெரும் ஏமாற்றமாக முடிந்துள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க எங்களது News4 Tamil முகநூல் பக்கத்தையும் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடருங்கள்.

தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன்

0

தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன்

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்ததையடுத்து தொடர்ந்து  அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலோனோர் அதிக அளவில் அ.தி.மு.க வில் சேர்ந்து வருகின்றனர். இது அமமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னால் தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவரது தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றதால் அவருக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக அதிமுகவினரும் அவரது ஆதரவாளர்களும் நம்பினர். ஆனால் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான  இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆனால், இந்த தேர்தல் முடிவு அமமுகவிற்கு சோதனையாக அமைந்தது. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி 5 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை மேலும் இரண்டாமிடத்திற்கும் வர முடியவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் தொகையை கூட பறி கொடுத்தது. இதைக்கண்ட  தினகரன் ஆதரவாளர்கள் இனிமேலும் அவருடன் இருந்தால் அவர்களுக்கான அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என முடிவெடுத்து தாய் கழகமான அ.தி.மு.க.,வில் சேர துவங்கி உள்ளனர்.

இந்த வாரத்தில் அமமுகவின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த  புறநகர் மாவட்ட செயலர், பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலர், சின்னத்துரை, புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலர், ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தனர்.

அவ்வாறே தர்மபுரியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி செயலர், முனுசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலர், அசோக்குமார், அரூர் பேரூராட்சி செயலர், திருவேங்கடம், மாவட்ட இலக்கிய அணி இணை செயலர், பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்தனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தெற்கு மாவட்ட பேரவை செயலர், பாலசுப்ரமணியன், இணை செயலர், ராஜாராம், திருவண்ணாமலை ஒன்றிய செயலர், அப்பாதுரை, நகரச் செயலர், பாஸ்கர் மற்றும் பல நிர்வாகிகளும் அமமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்தனர்.

இவ்வாறு தேர்தல் தோல்வியை தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் விரைவில் கட்சியே காணாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

0

விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள மும்மொழி கொள்கையில் விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தியை திணிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

அனைத்துப் பள்ளிகளிலும் நடுநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கத்துடன் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் வரவேற்கத்தக்க வகையில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பயனுள்ள பரிந்துரை ஆகும். அதேபோல், பள்ளிக்கல்வியை வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கது ஆகும். இவற்றை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

அதேபோல், தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு ஒழுங்குமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும், பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். இதன் மூலம் கல்விக்கட்டணக் கொள்ளைகள் தடுக்கப்படும். அதேபோல், மாணவர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் தேர்வுகளை எழுதலாம்; மதிப்பெண்களை உயர்த்த மறுதேர்வு எழுதலாம் என்ற பரிந்துரைகளும் பயனளிப்பவையாகும்.

அதேநேரத்தில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. 1968-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிவிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்கிறது. அதன்படி உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் ஒரு மொழிப்பாடமாக படிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்நடைமுறை மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மட்டும் கடைபிடிக்கப் பட்டு வந்த நிலையில், இனிவரும் காலங்களில் மாநிலப்பாடத்திட்ட பள்ளிகளுக்கும் மும்மொழிக் கொள்கை நீடிக்கப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையுயில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மும்மொழிக் கொள்கையை மாநில பாடத்திட்ட பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, கல்வி பெறும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் மும்மொழிக் கொள்கை திணிக்கப்படும் என்பதற்கு அறிகுறிகள் வரைவுக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது இந்தி மொழியை திட்டமிட்டு திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருப்பதாகவும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது திருப்தியளிக்கிறது.

இந்தி பேசாத மாநிலங்கள் மீது ஒருபோதும் இந்தி திணிக்கப்படாது என்று 55 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் நேரு உறுதியளித்திருந்தார். ஆனால், அதை மீறி பள்ளிகள் வாயிலாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் விரும்பி இந்தியைப் படிப்பது வரவேற்கத்தக்கது. மாறாக, இந்தியை கட்டாயப்பாடமாக்கி விருப்பமில்லாத மாணவர்கள் மீதும் திணிப்பதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது; இருமொழிக் கொள்கை தான் தங்களின் நிலைப்பாடு என்று அறிவித்திருக்கும் தமிழக அரசு, அதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் பின்வாங்கக் கூடாது.

மத்திய அரசும் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அதன் விருப்பங்களை மாநில அரசுகள் மீது திணிக்கக்கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் மாநிலங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயங்களை மட்டுமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். குறிப்பாக எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியை கடைபிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.