மூட்டு வலி முதுகு வலி இதய நோய் குணமாக! குடிக்க குடிக்க கால்சியம் பெருக இந்த ஒரு ட்ரிங்க் போதும்! 

Date:

Share post:

மூட்டு வலி முதுகு வலி இதய நோய் குணமாக! குடிக்க குடிக்க கால்சியம் பெருக இந்த ஒரு ட்ரிங்க் போதும்! 

இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களை வாரத்திற்கு ஒரு முறை குடித்தாலே போதும். எலும்புகள் பலமாகும். ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி குறையும். உயர் ரத்த அழுத்தம் சீராகி இதயத்தில் எந்த பிரச்சினையும் வராமல் இதயம் ஆரோக்கியமாக செயல்படும். இவ்வளவு சக்தி வாய்ந்த  பானத்தை தயாரிக்கும் முறையை பார்ப்போம்.

** ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் ராகி மாவை சேர்க்கவும். அதில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கெட்டிப்படாமல் கரைத்துக் கொள்ளவும்.

** ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின்னர் கரைத்து வைத்த ராகி மாவு கலவையை அதில் ஊற்றவும் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் அடி பிடித்து விடும். நன்றாக கொதிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும்.

** அடுத்து ஒரு ஆப்பிளை எடுத்துக்கொண்டு நன்றாக சுத்தம் செய்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

** அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கைப்பிடி அளவு தாமரை விதைகளை சேர்த்து ஈரப்பதம் போக வறுத்துக் கொள்ளவும்.

** மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த தாமரை விதைகளை சேர்த்து பொடி செய்யவும். பின்னர் அதில் நறுக்கி வைத்த ஆப்பிள், மூன்று பேரிச்சம்பழங்கள் கொட்டையை நீக்கி சேர்க்கவும்.

** அடுத்ததாக இதில் கொதிக்க விட்டு காய வைத்து ராகி மாவு கலவை மற்றும் காயவைத்து ஆற வைத்த பசும்பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

** பின்னர் இதை ஒரு டம்ளரில் அப்படியே சேர்த்து பருகலாம். இதில் இனிப்பு சுவைக்காக எதையும் சேர்க்க வேண்டாம். இந்த பானத்தை காலை மற்றும் மதியம் வேளைகளில் செய்து பருகலாம்.

** இதை அடிக்கடி குடித்து வர கால்சியம் குறைபாடு நீங்கி எலும்புகள் வலு பெறும். இதயமும் நன்கு பலம் பெறும்.

குறிப்பு:

ராகி குளிர்ச்சி தன்மை உடையது என்பதால் பனி மற்றும் மழைக்காலங்களில் சாப்பிடக்கூடாது. அதேபோல் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதனை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் மாலை மற்றும் இரவு வேலைகளிலும் தயார் செய்து குடிக்க கூடாது.

* தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.  மேலும் சிறுநீரக கல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் இதனை அறவே குடிக்கக் கூடாது.

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...