இந்திய உணவுகளில் கறிவேப்பிலை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.இது வாசனை நிறைந்த ஒரு மூலிகை இலையாகும்.கறிவேப்பிலை சாப்பிடுவதால் தலை முடி கருமையாகவும் அடர்தியாகும் வளரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால் கறிவேப்பிலை விதையை இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பது உங்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கறிவேப்பிலை விதையில் உள்ள மஹானிம்பைன் என்ற வேதிப்பொருள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.தினமும் கறிவேப்பிலை விதை தேநீர் அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஒழுங்குபடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை விதை: எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கப் அளவிற்கு பழுத்த கறிவேப்பிலை விதையை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை வெயிலில் இரண்டு நாட்களுக்கு நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த கறிவேப்பிலை விதையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
தயாரித்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை விதை பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகுங்கள்.
இந்த கறிவேப்பிலை விதை நீரை காலை மற்றும் மாலை என இருவேளை செய்து பருகி வந்தால் சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும்.