டெல்லியிலே தமிழர்களுக்கு பெருமை சேர்த்த அரவிந்த் கெஜ்ரிவால்! அசந்துபோன தமிழக முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

Photo of author

By Sakthi

டெல்லியிலே தமிழர்களுக்கு பெருமை சேர்த்த அரவிந்த் கெஜ்ரிவால்! அசந்துபோன தமிழக முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

Sakthi

தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமையையும், இந்தியா முழுவதும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்து இருக்கின்ற மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு, தமிழக அரசின் சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தமிழக முதலமைச்சரின் இந்த வலைதள பதிவிற்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பது நம்முடைய நாட்டின் பெருமை அதை பாதுகாப்பது நம்முடைய கடமை வாழ்க தமிழ் என்று தமிழிலேயே பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும், ஊக்குவிக்கும் விதமாக டெல்லியிலே, தமிழுக்கென்று ஒரு அகாடமி அமைத்துக் கொடுத்து இருக்கின்றது டெல்லி மாநில அரசு. தமிழை ஊக்குவிக்கும் விதமாகவே இதை செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கின்றார்.

டெல்லியிலே, தமிழுக்கு அகாடமி அமைப்பத்ததற்காக தமிழறிஞர்களும், தமிழக அரசியல் கட்சியினை சார்ந்த பிரமுகர்களும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையிலே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலைதளம் மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் அந்த வலைப்பதிவிற்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கிறார்.