வயிற்றில் உள்ள புழுக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமா?? இதை இரவு சாப்பிட்டால் போதும்!!

0
144

வயிற்றில் உள்ள புழுக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமா?? இதை இரவு சாப்பிட்டால் போதும்!!

குடலில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற உதவும் கசாயம்.வயிற்று புழுக்களுக்கு நாம் சாப்பிடும் உணவில் இருந்து தான் உணவு செல்கிறது. பூச்சிகள் அதிகரிக்கும் போது மலவாயில் அரிப்பு ஏற்பட செய்யும்.

இரவு நேரத்தில் களைப்பை உண்டாக்கும். நாளடைவில் பசியின்மை உண்டாக்கும். புழுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகும் போது அது சாப்பிடும் சாப்பாட்டை செரிமான மண்டலத்தை எட்டாது.

குடல் புழுக்கள் பல வகை உண்டு. அதிலும் உருளை புழுக்கள் உணவில் இருக்கும் இரும்புச்சத்து வைட்டமின் அடங்கிய உணவை உறிஞ்சக்கூடும்.

அதோடு வயிற்றுப்பூச்சிகள் சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும். குழந்தைகளுக்கு இரண்டு மாதம் ஒருமுறை பெரியவர்கள் மாதம் ஒரு முறை கண்டிப்பாக வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்றும் வைத்தியம் செய்ய வேண்டும்.

அதிலும் குடல் பூச்சி அதிகமாக இருந்தால் வாரம் ஒரு முறை, பிறகு இரண்டு வாரம் ஒரு முறை என படிப்படியாக குறைக்கலாம்.எனவே இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

வேப்ப இலை (கொழுந்து இலை)

சீரகம்

பூண்டு

மிளகு

விரல் மஞ்சள்

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

2: பின்பு உரலில் 2 பல் பூண்டு, 1 டீஸ்பூன் மிளகு, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து தட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும் அதனுடன் கொழுந்து வெப்பிலை இலை ஒரு கொத்து மற்றும் விரல் மஞ்சள் பாதி துண்டு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை மாதத்தில் மூன்று முறை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சுவைக்காக இதனுடன் தேன் சேர்த்து குடித்து வரலாம்.

பெரியவர்களாக இருந்தால் ஒரு கிளாஸ் இதனை குடிக்க வேண்டும் அல்லது ஐந்து வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருந்தால் இதனை கால் கிளாஸ் எடுத்துக் கொள்ளலாம்.

இதுவே ஒரு வயது இருக்கும் குழந்தைகளுக்கு கால் துண்டு விரல் மஞ்சள், கால் டேபிள் ஸ்பூன் சீரகம் மற்றும் சிறிது கொழுந்து வேப்ப இலை சேர்த்து கசாயம் வைத்து ஒரு சங்கடையின் அளவு கொடுக்கலாம்.

இது போன்ற குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழு பூச்சிகள் அனைத்தும் நீங்கி வயிறு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.