சற்றுமுன்: ஆசிரியர் பற்றாக்குறையை விடியா அரசு எப்பொழுது நிவர்த்தி செய்யும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!!

சற்றுமுன்: ஆசிரியர் பற்றாக்குறையை விடியா அரசு எப்பொழுது நிவர்த்தி செய்யும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!!

பள்ளிக்கல்வி துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் திமுக எடுப்பதில்லை. எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் இது குறித்து கண்டனங்கள் எழுப்பியும் துளி கூட அசராமல் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தனர். ஒவ்வொரு முறையும் கலந்தாய்வு இப்போது நடத்தப்படும் அப்பொழுது நடத்தப்படும் என்று தூசி தான் தட்டி வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு தற்பொழுது தான் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்றும் இது வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதால் எந்த ஒரு புகாருக்கும் இங்கே இடம் இருக்காது என்றும் கூறியுள்ளனர். இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் எவ்வாறு பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க முடியும் என எடப்பாடி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.