“பார்வை குறைபாட்டை ஒழிப்போம்” – உலக கண்பார்வை திறன் தினம்!

0
95

“பார்வை குறைபாட்டை ஒழிப்போம்” – உலக கண்பார்வை திறன் தினம்!

பார்வை இன்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றி உலக அளவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க “உலக கண் பார்வை தினம்” கொண்டாடப்படுகிறது.
இந்த தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2- ஆம் வியாழக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் பார்வை குறைபாடு மற்றும் கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பார்வை இழப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் பார்வைத் திறன் குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் முகாம்களில் கண் சம்பந்தமான நோய்களான பார்வை குறைபாடு, கண்ணில் புரை, கண்ணில் பூ விழுதல், கண் அழுத்தம் போன்றவைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட நோய்களால் யாரும் பார்வை இழக்க கூடாது என்பது திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் தொலைக்காட்சியை நாம் நீண்ட நேரம் பார்ப்பதால் நமது கண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் கண்ணின் பார்வை திறனானது குறைகிறது. கண்களுக்கு நாம் சரியான ஓய்வு அளிக்க வேண்டும் மேலும் பார்வைத் திறனை அதிகரிக்கும் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் பார்வை திறன் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

author avatar
Parthipan K