தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.72 குறைவு!

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.72 குறைவு!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,608-க்கு விற்பனை ஆகிறது. 

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,201க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.69-க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.69,000-க்கு விற்பனையாகிறது.