9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!!

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!!

கிரிக் டிரேக்கர் என்ற இணையதளம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கு ரசிகர் ஒருவர் அளித்த பதில் 9 மாதங்கள் கழித்து தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது. அந்த ரசிகரின் பதிலை வைத்து இந்திய அணியின் ரசிகர்கள் அனைவரும் உலகக் கோப்பை இந்திய அணிக்கு என்று பேசி வருகின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரிக்டிரேக்கர் என்ற கிரிக்கெட் தொடர்பான இணையதளம் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்று கேட்டது. அதாவது இந்த ஆண்டில் இரண்டு ஐசிசி தொடர்களும், ஐபிஎல் தொடரும், ஆசியக் கோப்பை தொடரும் நடக்கவிருந்தது ஆண்டு துவக்கத்தில் தெரியும். அதை மையமாக வைத்து கிரிக்டிரேக்கர் இணையதளம் கேள்வி ஒன்றை கேட்டது.

அதாவது 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வது யார்? 2023ம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் கோப்பை வெல்வது யார்? 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவது யார்? 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவது யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு ஷியாம் அஹமது என்ற ரசிகர் குத்து மதிப்பாக 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய அணியும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியும் கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார். அவர் கணித்தது போலவே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா அணியும் கோப்பையை கைப்பற்றியது.

தற்பொழுது நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அந்த ரசிகர் கூறியதை போலவே இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து உலகக் கோப்பை குறித்தான கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது கிரிக்டிரேக்கர் கேட்ட உலகக் கோப்பை தொடர்பான கேள்விக்கு ஷியாம் அஹமது அவர்கள் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரை இந்தியா அணி வெற்றி பெறும் என்று பதில் அளித்துள்ளார். ஷியாம் அஹமது அவர்கள் கணித்தபடி மூன்று விஷயங்கள் அப்படியே நடந்துள்ளது. கடைசியாக கணித்து விஷயமும் நடந்தால் நன்றாக இருக்கும் என்பது இந்திய ரசிகர்களின் சிந்தனையாக இருக்கின்றது.