மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு!

மாணவர்களே குட்நியூஸ்! இனி ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்!! யுசிஜி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிப்பதற்கு இந்தியாவின் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று யுசிஜி அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது.

அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே நேரத்தில் இரண்டு வகை படிப்புகளை படிப்பதற்கான விதிமுறைகளை யுசிஜி வெளியிட்டது.யுசிஜி – யின் அறிவிப்பின்படி அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும்,மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு வகை படிப்புகளில் சேர அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு சேர்ந்த பிறகு அதே காலகட்டத்தில் மற்றொரு கல்லூரியில் வேறொரு படிப்பில் சேர விரும்பும் மாணவர்களிடம் அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் இடமாற்றுச் சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வலியுறுத்துகிறது. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பும் இரண்டாவது பட்டப்படிப்பில் சேர முடியாமல் போய்விடுகிறது.

இந்நிலையில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஒரே நேரத்தில் இரண்டு வகை படிப்புகளை படிக்க வழிவகை செய்யும் விதமாக தங்கள் நிர்வாக வழிகாட்டுதல்களை அமைத்து இரண்டு வகை பட்டப்படிப்புக்கான வசதிகளை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என யூசிஜி அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிக்க வகை செய்யும் விதமாக தங்கள் நிர்வாக வழிகாட்டுதல்களை அமைத்து இரண்டு படிப்புக்கான வசதிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என யூஜிசி உத்தரவிட்டுள்ளது.