நாளை முதல் பொங்கல் விடுமுறையா?

0
277

நாளை முதல் பொங்கல் விடுமுறையா?

தமிழகத்தில் தீபாவளி பொங்கல் போன்ற முக்கியமான பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் அனைவரும் சொந்த ஊர் சென்று திரும்பும் வகையில் கூடுதல் விடுமுறை அளிப்பது வழக்கம்.

இந்நிலையில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விடுமுறைகள் அளிக்க கோரி பொதுமக்கள் தமிழகம் முதல்வருக்கு கோர்க்கையை விடுத்துள்ளனர்.

அதாவது பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக ஜனவரி 12 மற்றும் 13ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்க கோரியும் பொங்கல் பண்டிகை முடித்துவிட்டு மீண்டும் இருப்பிடம் செல்வதற்கு வசதியாக ஜனவரி 18 ஆம் தேதி விடுமுறை அளிக்க கோரியும், கோரிக்கை எழுந்துள்ளது.
மக்களின் இந்த கோரிக்கையை முதல்வர் விரைவில் ஆலோசனை செய்து மக்களுக்கு சாதகமான முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.