ஐ லவ் யூ ஷாரூக்கான் சார்!!! எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் பதிவு வைரல்!!!

ஐ லவ் யூ ஷாரூக்கான் சார்!!! எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் பதிவு வைரல்!!!

பிரபல சமூக வலைதள செயலியான எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்காக ஷாரூக்கான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் ஜவான் திரைப்படம் உருவாகி கடந்த செப்டம்பர் 7ம் தேதி பேன் இந்தியன் திரைப்படமாக வெளியானது. மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ஜவான் திரைப்படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஜவான் திரைப்படம் வசூலில் மிகப் பெரிய சாதனையை செய்துள்ளது.

ஜவான் திரைப்படம் இதுவரை 1004 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது. மேலும் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இந்த வருடம் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாக ஜவான் இருக்கின்றது. இதற்கு முன்னர் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 23ம் தேதி வெளியான பதான் திரைப்படம் உலக அளவில் 1050 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாயை வசூல் செய்ததற்கு நடிகர் விஜய் அவர்கள் நடிகர் ஷாரூக்கான், இயக்குநர் அட்லி மற்றும் படக்குழுவிற்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அவர்கள் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு எக்ஸ் பக்கத்தில் “ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு ஷாரூக்கான், அட்லி மற்றும் ஜவான் குழுவிற்கு வாழ்த்துக்கள். ஐ லவ் யூ ஷாரூக்கான் சார்” என்று பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் அவர்களின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.