மேல் வயிறு தொப்பை இருக்கின்றதா? இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து குடித்தால் போதும்!

மேல் வயிறு தொப்பை இருக்கின்றதா? இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து குடித்தால் போதும்!

பெண்களுக்கு பெரும்பாலும் மேல் வயிறானது பெரிதாகிவிடும். அனைத்து வகையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் அந்த வயிறு பகுதியானது குறையவில்லை என பெரும்பாலான பெண்கள் மருத்துவரைச் சென்று ஆலோசனை பெற்று வருகின்றனர். மேல் வயிறு குறைய என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

அடிவயிற்று பகுதியில் தொப்பை என்பது மன அழுத்தத்தின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. அடிவயிற்றில் டயர் போன்ற தொப்பை ஏற்பட்டால் அது ஹார்மோன் சேஞ்சஸ்தான் காரணம். இறுக்கமாக தொப்பை இருப்பதற்கு கல்லீரலில் செயல்திறன் குறைவாக இருப்பதனால் ஏற்படுகிறது.

மேல் வயிற்றில் தொப்பை ஏற்படுவதற்கு காரணம் செரிமான கோளாறு தான். பொதுவாக மேல் வயிற்று தொப்பை இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் தெளிவாக செய்து முடிக்கும் குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அதிகளவு நாம் ஒரு விஷயத்தை சிந்தித்துக் கொண்டிருந்தாலும் இவ்வாறான தொப்பை ஏற்படும்.

இதற்காக சீரகம் மற்றும் ஏலக்காய் சேர்ந்த தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதன் மூலம் செரிமான கோளாறு பிரச்சனைகள் நீங்கும். ஏலக்காய் மன அமைதியை தரும். ஏலக்காய் செரிமான சக்தியை தூண்டக்கூடியது.

ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம், இரண்டு ஏலக்காய் எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மூடி வைக்க வேண்டும். இதனை தினந்தோறும் காலை அல்லது இரவு நேரங்களில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மேல் வயிறு தொப்பை குறைய தொடங்கும்.