Kerala Recipe: மலபார் ஸ்பெஷல் ‘உன்னக்கயா’ ஆஹா டேஸ்டில் செய்வது எப்படி?

0
175
#image_title

Kerala Recipe: மலபார் ஸ்பெஷல் ‘உன்னக்கயா’ ஆஹா டேஸ்டில் செய்வது எப்படி?

கேரளா,மலபாரில் வாழைப்பழத்தை அவித்து செய்யப்படும் உன்னகய்யா ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி ஆகும்.இதை மிகவும் சுவையாக செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)வாழைப்பழம்
2)நெய்
3)முந்திரி
4)உலர் திராட்சை
5)நாட்டு சர்க்கரை
6)துருவிய தேங்காய்
7)ஏலக்காய் தூள்
8)எண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து 2 அல்லது 3 வாழைப்பழங்களை வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வாழைப்பழத்தின் தோலை மட்டும் தனியாக பிரித்து எடுத்துவிட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து நெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் முந்திரி,திராட்சை சேர்த்து வதக்கவும்.

பிறகு பாதி தேங்காயை துருவல் கொண்டு துருவி அதில் சேர்த்து வதக்கவும்.பின்னர் அதில் 1/2 கப் நாட்டு சர்க்கரை மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் மசித்த வாழைப்பழத்தை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அதன் நடுவில் வறுத்த தேங்காய் கலவை சிறு உருண்டை வைத்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து பொரிக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் உருட்டி வைத்துள்ள வாழைப்பழ உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.இவ்வாறு செய்தால் உன்னக்கயா மிகவும் சுவையாக இருக்கும்.