கேரளா ஸ்பெஷல் தேங்காய் பணியாரம் – செய்வது எப்படி?

0
157
#image_title

கேரளா ஸ்பெஷல் தேங்காய் பணியாரம் – செய்வது எப்படி?

பஞ்சு போன்ற தேங்காய் பணியாரம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்…

*தேங்காய் துருவல் – 1/2 கப்
*இட்லி அரிசி – 300 கிராம்
*வெள்ளை உளுந்து – 1 ஸ்பூன்
*அவல் – 1/2 கப்
*உப்பு – தேவையான அளவு
*தேங்காய் துண்டு(நறுக்கியது) – 1 கப்
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை…

ஒரு பாத்திரத்தில் 300 கிராம் இட்லி அரிசி மற்றும் 1 ஸ்பூன் வெள்ளை உளுந்து சேர்த்து தண்ணீர் ஊற்றி 6 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

அதேபோல் அவல் 1/2 கப் அளவு ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

அரிசி, உளுந்து, அவல் அனைத்தும் ஊறி வந்த பின்னர் ஒரு மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் 1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு பாத்திரத்திற்கு ஊற்றி 8 மணி நேரத்திற்கு புளிக்க விடவும்.

மாவு நன்றாக புளித்து வந்த பின்னர் அதில் 1 கப் தேங்காய் துண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

அடுப்பில் ஒரு பணியாரக்கல் வைத்து அவை சூடானதும் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி பணியாரம் சுட்டெடுக்கவும்.

இந்த பணியாரம் மிகவும் மிருதுவாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும். இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.