சீன நாட்டில் சிவன் கோவில்!

Photo of author

By Parthipan K

சீன நாட்டில் உள்ள ‘காண்டன்’ நகரிலிருந்து, வடக்கே 500 மைல்கல் தூரத்தில் ‘சூவன்சௌ’ என்னும் துறைமுக நகர் ஒன்று உள்ளது. பண்டைய காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய இந்நகருக்கு பல தமிழ் வணிகர்கள் வந்து சென்றுள்றர். இதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

12-ம் நூற்றாண்டில் சிறு சிறு இனக்குழுக்களாக பிரிந்து கிடந்த மங்கோலியர்களை ஒன்றினைத்து, பெரும் படையை உருவாக்கி, உலகின் பல பகுதிகளின் மீது போர் தொடுத்து, உலகின் பெரும் பகுதிகளை ஆண்ட மன்னன் செங்கிஸ்கான். தனது அண்டை நாடாட சீனாவையும் வென்று ஆட்சி புரிந்து வந்தான். அவரின் இளைய மகனான தொலுய்கான் என்பவரின் மகன் தான் குப்லாய்கான். குப்லாய்கானுக்கு 30 வயதான போது, அவரது மூத்த சகோதரர் மாங்கே, மங்கோலிய பேரரசின், பேரரசராக பொறுப்பேற்றார். இதனையடுத்து மாங்கே, வடக்கு சீனா முழுவதையும் ஆட்சி செய்யும் பொறுப்பை தனது சகோதரரான, குப்லாய்கானுக்கு வழங்கினார்.

 

இவர் தனது ஆட்சிக் காலத்தில், சீன நகரில் வியாபார நிமித்தமாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களின் மூலமாக சைவ சமயத்தின் அருமைகளை அறிந்து கொண்டு, அங்கிருந்த தமிழர்களின் உதவியோடு ஒரு சிவன் கோவில் கட்டினார். அந்த கோவிலில், இந்த கோவிலானது சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு, இன்றவும் சீனஅரசால் அந்த கோவிலில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

இந்த கோயிலாது, ‘திருக்கதாலீஸ்வரம்’ எனவும், ஆலயத்தில் உள்ள சிவன் ‘திருக்கதாலீஸ்வரன் உதயநாயனார்’ எனவும் வழங்கப்படுகிறார். இக்கோயிலில் ‘சோழர் காலச் சிற்பங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.