மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியின் எதிரொலி! இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர் !!

0
70
#image_title
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியின் எதிரொலி! இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு சொகுசு கார் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் பரிசாக அளித்துள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகர் எஸ்ஜே சூரியா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, இயக்குநர் செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரண்டு முறைகளில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்கு காரணம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர். விஷால் மற்றும் நடிகர் எஸ்.ஜே சூரியாவின் நடிப்பு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களின் இசை மற்றும் படத்தில் வேலை செய்த அனைத்து நபர்களையும் சேரும்.
போன் மூலமாக டைம் டிராவல் செய்வதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் புதுமையாக இருந்தது. வாட்ச்  வைத்து டைம் டிராவல் செய்வது, மிஷன் வைத்து டைம் டிராவல் செய்வது என்று டைம் டிராவல் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வெளியாகி இருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களை சற்று அதிகமாகவே கவர்ந்தது.
உலக அளவில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இதையடுத்து படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மார்க் ஆண்டனி திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்கள் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு புதிய பி.எம்.டபள்யூ கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூரியா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர் வினோத் குமார் ஆகியேருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் கார் பரிசாக பெறும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.