அக்னிபத் வீரர்களின் காவனத்திற்கு!இன்று முதல் தொடங்குகிறது ஆன்லைன் பதிவு!

அக்னிபத் வீரர்களின் காவனத்திற்கு!இன்று முதல் தொடங்குகிறது ஆன்லைன் பதிவு!

அக்னிபத்  திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்றரை காலம் முடிவிற்கு வரும் பொழுது மேலும் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் அதில் 25 சதவீதம் வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

மீதமுள்ள 75 சதவீத வீரர்கள் வெடிப்பு பணம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த 25 சதவீத வீரர்கள் நான்கு ஆண்டுகள் முழுவதும் பணியாற்றலாம் பணியின்போது அவர்களுக்கு காப்பீடு திட்டமாக 40 லட்ச ரூபாய் இலவசமாக வழங்கப்படும். இந்த நான்கு ஆண்டுகாலம் பணி முடிவிற்கு வரும்பொழுது பிடிப்பு பணமாக வழங்கப்படும் 10 – 12 லட்ச ரூபாயில் ஒரு லட்ச ரூபாய் மட்டும் ரொக்கமாக வாங்கிக்கொண்டு மற்ற பணத்தை வங்கி பத்திரமாக பெற்றுக்கொள்ளலாம். எனவும் மத்திய அரசு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் அக்னிபத் வீரர்கள் விமானப்படையில் சேர்வதற்கு இன்று முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பத்தின் மூலம் தேர்வாகும் அக்னிபத் வீரர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களின் 6 மாத பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது விமானப்படை. ஆன்லைன் பதிவினை http://Agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவிடலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.