Saturday, July 5, 2025
Home Blog Page 10

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; இனி 5 நாட்கள் தான் பள்ளி!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிவடைந்து. 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. பள்ளி திறப்பு இரண்டு வாரத்திற்கு தள்ளிப் போகலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் மழை பெய்து குளிர்ச்சி காரணமாக பள்ளி திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி பிறந்தனர்.

இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகும் நிலையில் எந்த ஒரு விடுமுறையும் அதிகம் விடப்படாமல் இருக்கின்றது.. ஜூலை மாதம் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் இந்த மாதமும் எந்த பண்டிகையும் வராததால் அரசு விடுமுறை கிடையாது என தெரியவந்துள்ளது.

ஏமாற்றமடைந்த மாணவர்களுக்கு குட் நியூஸ் அளிக்கும் விதமாக ஒவ்வொரு நடப்பு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள், தேர்வு தேதிகள், பொது தேர்வு தேதிகள் ஆகிய விவரங்கள் பள்ளி கல்வித்துறை சார்பாக முன்கூட்டியே வெளியிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. அதில் மொத்தம் 210 நாட்கள் வேலையை நாட்களாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்வியாண்டின் இறுதி வேலை நாள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆகும்.

காலாண்டு விடுமுறை ஒன்பது நாட்கள், அரையாண்டு விடுமுறை 12 நாட்கள் விடப்பட்டுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு மூன்று நாட்கள், பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் இந்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளனர். மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ரேஷன் கார்டு இருக்கா; அரசு சொன்ன அப்டேட்!

ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது, ரேஷன் அட்டை வைத்திருந்தாலும் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் அரசு சார்பாக மலிவு விலையில் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில் ரேஷன் கார்டு இல்லாவிட்டால் அரசின் பல்வேறு உதவிகளை பெற முடியாத சூழல் உள்ளது, ரேஷன் கார்டு இல்லாமல் பல அரசு திட்ட சலுகைகளை பெற முடியாதவர்கள் இருக்கின்றனர், வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு வெவ்வேறு வகைகளாக பிரித்து வழங்குகின்றனர்.

ரேஷன் கார்டு இல்லாமல் இலவச ரேஷன் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த விலையிலும் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் அரசிடம் இருந்து வழங்கப்படுகின்றது. இந்த ரேஷன் உதவிகள் பொது விநியோக முறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் உதவிகள் மக்களுக்கு கிடைத்து வரும் நிலையில் கோதுமை பருப்பு, அரிசி சர்க்கரை, எண்ணெய் மட்டுமின்றி வேறு சில உதவிகளும் கிடைக்கின்றது.

ரேஷன் கார்டு இல்லாமல் ரேஷன் உதவிகள் நிறுத்தப்படுவது மட்டுமின்றி வேறு சில திட்டங்களிலும் பயன்பெற முடியாது. அதனால் மகளிர் உரிமைத் தொகை இலவச சிலிண்டர், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பயனடைய முடியாமல் இருக்கின்றது.

ரேஷன் கார்டு இல்லை என்றால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற முடியாது. இந்த திட்டத்தின் மூலம் பலன்களை பெறுவதற்கு விண்ணப்பதாரரிடம் ரேஷன் அட்டை இருப்பது கட்டாயம் ரேஷன் கார்டு இல்லாமல் மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதன் கீழ் தேவைப்படுபவர்களுக்கு ஐந்து லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம் ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பயன்களை பெற ரேஷன் அட்டை வைத்திருப்பது அவசியம். இந்தத் திட்டத்திற்கான தகுதியை நிரூபிக்க ரேஷன் கார்டு தேவைப்படும்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தினை பெறுவதற்கு ரேஷன் கார்டு அவசியம் கார்டு இல்லாவிட்டால் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் அனைவரும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும் என அரசு சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்திருந்தால் விரைவில் அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்

நான் இதெல்லாம் வேணும்னு செய்யல! என்னை இந்த பிரச்சனையில் சிக்க வச்சுட்டாங்க! ஸ்ரீகாந்த் கதறல்!

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். பின்னர் தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டார். தற்போதும் அவ்வப்போது சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.

அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் போதை பொருளை கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனால் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தீங்கிரை என்ற படத்தை பிரசாந்த் தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகன் நடித்துள்ளார். தீங்கிரை திரைப்படத்திற்கு தர வேண்டிய சம்பளத் தொகையில் 10 லட்சம் ரூபாயை பிரசாந்த் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கவில்லை.

பணம் கேட்டு ஸ்ரீகாந்த் பிரசாந்தை தொடர்பு கொண்ட போது அடிக்கடி கொக்கைன் போதை பொருளை கொடுத்து சம்பளத் தொகையில் கழித்து வந்துள்ளார். இதற்கு மேல் ஸ்ரீகாந்த் கொக்கைன் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

கைதாவதற்கு முன்புதான் அவரிடம் இருந்து 250 கிராம் பாக்கெட் வாங்கினேன். எனது நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். படத்திற்கு தரவேண்டிய 10 லட்சம் ரூபாய் சம்பளம் பாக்கி பற்றி பிரசாந்திடம் கேட்டபோது எனக்கு கொக்கைன் கொடுத்து சம்பளத்தை ஈடு கட்டினார். தொடர்ந்து சம்பளம் கேட்கும் போதெல்லாம் என்னிடம் கொக்கைன் கொடுத்து என்னை இந்த பழக்கத்திற்கு அடிமையாக்கியது பிரசாந்த் தான் என அதிமுக நிர்வாகி மீது குற்றம் சாட்டி உள்ளார் ஸ்ரீகாந்த்.

இந்த விஷயத்தில் ஸ்ரீகாந்த்க்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா இல்லை வேறு ஏதேனும் நடிகர் நடிகைகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இயக்குனர் விஷ்ணுவரதனின் சகோதரர் கிருஷ்ணாவும் தற்போது இந்த வழக்கில் தேடப்பட்டு வருகிறார். அவர் கேரளா சென்று விட்டதாகவும் அவருடைய நம்பர் ஸ்விட்ச் ஆஃப் இல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறையினர் நடிகர் கிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.

இது மட்டும் நடக்கலைனா நிச்சயம் நாங்க ஜெயிச்சிருப்போம்! சுப்மன் கில் ஓபன் டாக்!

இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அனுபவம் வாய்ந்த விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இந்திய அணி இந்தத்தொடரில் வெல்வது கடினமே என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 364 ரன்களை குவித்தது. மொத்தமாக இந்தியா சார்பில் சுப்மன் கில் 1 சதம், ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸிலும் சதம், ஜெய்ஸ்வால் 1 சதம், ராகுல் இரண்டாவது இன்னிங்சில் சதம் என ஒரே டெஸ்ட்டில் 5 சதங்களை இந்திய அணி குவித்தது.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 372 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இருந்தும் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் 149 ரன்களை குவித்ததன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து இந்தியாவை வென்றது. இந்த தோல்விக்கு பிறகு சுப்மன் கில் தோல்விக்கான காரணம் என்ன என்று பேட்டி கொடுத்துள்ளார்.

போட்டியில் கேட்ச் தான் வெற்றிகளை தீர்மானிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டோம். அதேபோல இரண்டு இன்னிங்சிலும் இன்னும் நிறைய ரன்கள் எங்களால் எடுத்திருக்க முடியும் . இரண்டு இன்னிங்ஸிலும் கடைசி ஐந்து விக்கெட்டுகளை மிகவும் சொற்பமான ர ன்களில் இழந்து விட்டோம். நாங்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டிய இடத்தில் ஆட்டத்தை தவற விட்டு விட்டோம். அதுவே எங்கள் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அடுத்த ஆட்டத்தில் எங்கள் முழு திறமையை வெளிப்படுத்துவோம் என்று பேட்டி கொடுத்துள்ளார் சுப்மன் கில்.

எனக்கு சப்போர்ட் செய்தால் தேர்தலில் சீட்.. பாமக அருளுக்கு போன பவர்!! அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த அட்டாக்!!

PMK: பாமக கட்சியானது இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தைலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, என்னுடன் இருப்பவர்களுக்கு கட்டாயம் சட்டமன்றத் தேர்தலில் பதவி வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி பாமக மகளிர் மாநாடானது பூம்புகாரில் நடைபெற உள்ள நிலையில் இது ரீதியாக ஆலோசனை மேற்கொள்ள புதிய மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் உள்ளிட்டோரை நியமிக்க உள்ளோம்.

மேற்கொண்டு யாரெல்லாம் புதிய தலைவர்கள் என்பது குறித்து வெளிப்படுத்தவே இந்தக் கூட்டம். அந்த வகையில் என்னுடனே இருக்கும் எம்எல்ஏ அருளுக்கு பாமகவின் இணை பொது செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இமயமலையின் உயரத்தின் அளவிற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் என்றைக்கும் என்னுடன் இருப்பவர். மேலும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப்படும் என்பது குறித்து தற்போது வரை முடிவெடுக்கவில்லை.

அதேபோல என்னுடன் சேர்ந்து செயல்படுபவர்களுக்கு கட்டாயம் தேர்தலில் சீட்டு வழங்கப்படும். பாமகவின் அனைத்து முடிவுகளையும் நான்தான் எடுப்பேன், அதற்கான அதிகாரமும் என்னிடம் தான் உள்ளது. எங்களது தேர்தல் கூட்டணியானது வித்தியாசமான முறையிலும், சிறந்து விளங்கும் வகையிலும் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அப்பா மகனுக்கிடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்து மாவட்ட செயலாளர் என பலரை ராமதாஸ் மாற்றி அமைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது வரை 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர் 60க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் இதற்கு எதிராக அன்புமணியும் அறிவிப்பை வெளியிட்டு பொது குழு கூட்டத்தை நடத்தி வருகிறார். தற்போது பாமக அருளுக்கு புதிய பதவி வழங்கியதை அடுத்து அன்புமணி ரீதியாக எந்த ஒரு எதிர் அறிவிப்பும் வெளியாகவில்லை.

6 அல்லது 8 சீட் கொடுத்து ஏமாற்ற முடியாது.. தேர்தலில் போட்டியிடாமல் கூட போகலாம்!! ஸ்டாலினுக்கு திருமா வைக்கும் ட்விஸ்ட்!!

VSK: சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமென பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் தற்போது ஆரம்பித்த விஜய் கட்சியே கூட்டணியில் பங்கு என பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. இதனிடையே பாஜகவும் சுதாரித்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து, இலை மேல் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சி தான் என கூறுகின்றனர். ஆனால் அதிமுக அதற்கு ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு புதிய நடவடிக்கைளை மாற்று கட்சியினர் செய்கையில், இதனால் ஆளும் திமுக விற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

அதாவது, அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பங்கு வேண்டுமென கேட்க ஆரம்பித்துவிட்டனர். இல்லையென்றால் தொகுதி ஒதுக்கீட்டில் டிமெண்ட் வைத்து வருகின்றனர். இதன் வெளிப்பாட்டை சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸிடம் பார்க்க முடிந்தது. இதில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருமா மறைமுக விருப்பத்தை தெரிவித்துள்ளார். எல்லோரும் எங்களுக்கு திமுக 6 அல்லது 8 தொகுதிகள் தான் தரும், 10 தொகுதிகளை தாண்டி சீட் கொடுத்து ஊக்குவிக்க மாட்டார்கள் என கூறுகின்றனர். எங்களை டீ பன் கொடுத்தெல்லாம் ஏமாற்ற முடியாது.

நாங்கள் 234 தொகுதிகளுக்கும் தகுதியானவர்கள், எங்களுக்கென்று பெரிய வலிமை உண்டு. நான் இவ்வாறு சொல்வதில் ஆணவம் இல்லை. தேர்தல் மதிப்பீட்டிலும் கூறவில்லை. சமூக சூழல் களம் மாறியுள்ளது. அதை வைத்து தான் சொல்கிறேன். எனக்கு பதவி நாற்காலி மீது பெரிதாக நம்பிக்கை என்பதில்லை. அது இல்லாமல் கூட கீழே அல்லது பிளாஸ்டிக் சாரில் கூட அமர தயார். ஏன் தேர்தலில் இனி போட்டியிட போவதில்லை என்று கூட அறிவிக்கலாம். எந்த தேர்தலிலும் சீட் பேரம் பேசுவதற்காக இந்த கட்சி இல்லை என தெரிவித்ததோடு, கோவிலில் வைத்த திருநீரை அளித்தது குறித்தும் விளக்க தெரிவித்தார்.

பெண்களின் வங்கி கணக்கில் இனி 1500 கிரெடிட் ஆகும்; அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

பெண்களின் நலனை கருதி மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் சுதந்திரமாக இருக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

அதிலும் பெண்களுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்கள் பல்வேறு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் மூலம் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் தோறும் தங்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகின்றது

இத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படுகின்றது. இது போலவே கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்தில் தொகை மட்டுமே வேறுபடுகின்றது.

மத்திய பிரதேசத்தில் லாட்லி பெஹ்னா யோஜனா என்ற பெண்களுக்கு மாதம்தோறும்  ஊக்கத்தொகை வழங்க்கபடுகின்றது. மத்திய பிரதேச பெண்களுக்கு மாதந்தோறும் 1250 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதியே இந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் இணைவதற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மத்திய பிரதேச அரசின் சங்கரா அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் சங்கரா தனிநபர் அட்டை ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மொபைல் எண் ஆகியவை இத்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் மூலமாக உதவித்தொகை பெற குடும்ப வருமானம் 2.5 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துவோர்  இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

இத்திட்டத்தில் சேர்ந்துள்ள பெண்களுக்கு பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக உதவித்தொகை வழங்க மாநிலம் முடிவு எடுத்துள்ளது.. அதன் பேரில் வரும் ஜூலை மாதத்தில் மத்திய பிரதேசத்தில் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறக்கூடிய பெண்களுக்கு 250 ரூபாய் கூடுதலாக கொடுக்கப்பட்டு  ஜூலை மாதத்தில் இருந்து  1500 ரூபாய் வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாணவிகள் உதவி தொகை பெற உடனே விண்ணபியுங்கள்; தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!

தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களில் விண்ணப்பிக்க திருநங்கை, திருநம்பி நிபந்தனைகள் தளர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் திருநங்கை மற்றும் திருநம்பி மற்றும் இடை பாலினத்தவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழத்தில் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தற்போது உத்தரவு வெளியாகி உள்ளது.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்பு இருந்தது. ஆனால் தற்போது திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இந்த நிபந்தனைகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளது..

பட்டையும் மற்றும் தொழிற்படிப்பு படிக்கக்கூடிய திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் யூ எம் ஐ எஸ் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி, உயர் கல்வி, ஆராய்ச்சி கல்விக்கு தமிழக அரசு முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. அரசு பள்ளி மாணவிகள் அதிக அளவில் உயர்கல்வி படிக்க புதுமைப் பெண் திட்டம் பெரிதும் உதவுகின்றது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்விகள் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் இத்திட்டத்தின் மூலமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு நிதி நெருக்கடி காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவிகளை அனுப்ப முடியாத சூழல் நிலவி வருவதால் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு உதவும் வகையில் கடந்து 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பாட பிரிவினை முடிக்கும் வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ChatGPT-யிடம் எதையெல்லாம் கேட்க கூடாது! அந்த 5 முக்கியமான விஷயங்கள்!

ChatGPT என்னும் ஏ.ஐ. நுண்ணறிவு உதவியாளரிடம் நம்மால் பல விஷயங்களை கேட்க முடியும். ஆனால் சில விஷயங்களை கேட்கக்கூடாது என்பதும், அவை பாதுகாப்பு மற்றும் நெறிமுறை காரணங்களால் தவிர்க்கப்பட வேண்டியவைகளும் ஆகும்.

1. “என் நண்பரின் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டை சொல்ல முடியுமா?”

இது போன்ற கேள்விகள் ஹேக்கிங் அல்லது சைபர் குற்றங்களில் அடங்கும். இது சட்டத்துக்கு எதிரானது. ChatGPT இதற்கு பதில் அளிக்காது.

2. “என் எதிரியின் எதிர்காலத்தில் என்ன நடக்கும்?”

தனிப்பட்ட மற்றும் எதிர்மறையான நோக்கத்துடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு ChatGPT பதிலளிப்பது இல்லை. இது நெறிமுறைக்கு விரோதமானதாகும்.

3. “பரீட்சை தேர்வுகளை எழுதிக் கொடுங்கள்.”

மோசடி அல்லது கல்வி குற்றங்களில் அடங்கும் கோரிக்கைகள் ChatGPT மூலம் நிறைவேற்ற முடியாது. பள்ளி மற்றும் கல்லூரிகள் இதற்காக ஏற்கனவே தடுப்பு முறைகளை அமைத்துள்ளன.

4. “தீவிரவாத செயலை எப்படி செய்யலாம்?”

வன்முறை, தீவிரவாதம் அல்லது சட்ட விரோதமான செயல்களைத் தூண்டும் கேள்விகளுக்கு ChatGPT பதில் தராது. இது பாதுகாப்பு விதிகளை மீறும்.

5. “யாராவது ஒருவரின் முகவரி, வங்கி விவரம், ஆதார் எண் கூறுங்கள்.”

தனிப்பட்ட அல்லது ரகசிய தகவல்களை பகிரவோ, கேட்கவோ முடியாது. இது தனிநபர் பாதுகாப்பு சட்டங்களை மீறும்.

ஏன் இவை தவிர்க்க வேண்டும்?

ChatGPT என்பது நுண்ணறிவுடன் செயல்படும் மென்பொருள். இது நல்ல பயனுள்ள தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்டவிரோத, தவறான, அல்லது தீங்கிழைக்கும் விஷயங்கள் இதற்குள் அனுமதிக்கப்படாது.

தகவல் பாதுகாப்பு, நெறிமுறைகள், மற்றும் சமூக பொறுப்புடன் கேள்விகள் கேட்பது அவசியம்.

சரியான முறையில் பயன்படுத்துங்கள்!

ChatGPT-யை விவரமான விளக்கங்கள், தொழில்நுட்ப உதவிகள், திறனறிவு வளர்ச்சி, மொழிபெயர்ப்பு, பாடம் புரிதல், போன்ற நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம்.

ஆனால் தனிப்பட்ட தகவல்களை அல்லது சட்ட விரோத கோரிக்கைகளை தவிர்க்கவும்.

ChatGPT என்பது ஒரு புத்திசாலியான நண்பன். அதை பாதுகாப்பாக, நெறிமுறையுடன் பயன்படுத்துங்கள்!

 

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய செய்தி; இத பண்ணலனா பணம் கிரெடிட் ஆகாது!

விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றது. அதில் ஒன்றாக பி எம் கிசான் திட்டம் அமைந்துள்ளது நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறு குறு விவசாயிகள் ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியை பெரும் வகையில் மத்திய அரசு திட்டத்தை உருவாக்கியிருக்கின்றது.

இந்த நிதி ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பத்து கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைகின்றனர். இந்த திட்டத்தில் போலி பயனாளிகள் இணைந்து பயன் பெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருக்கின்றது.

அதனை கவனிக்கும் வகையில் அரசு நிர்வாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பிஎம் கிசான்  உள்ளிட்ட திட்ட பயணிகளை பெற விவசாயிகளின் தனித்துவமான அடையாள எண் பெறுவது கட்டாயம் என தெரிவித்துள்ளனர். இந்த விவசாய அடையாள எண் மூலமாக வேளாண் பயிர் கடன், விவசாய இடுப்பொருட்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம், வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய உதவி திட்டங்கள், இதர துறைகளின் உழவர் நலத்திட்டங்கள் ஆகியவற்றை பெற முடியும்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய வருவாய் கிராமங்களிலும் முகாம்களின் மூலமாக வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் பொது சேவை மையங்களின் மூலமாகவும் பதிவு செய்யலாம். விவசாயிகள் பதிவு மேற்கொள்ள பட்டா, சிட்டா, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன்களுடன் முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம், விவசாயிகள் ஜூன் 30-ம் தேதிக்குள் தங்கள் கிராமங்களில் நடைபெறும் முகாம்களில்  கலந்துகொண்டு தங்களுடைய நில உடைமைகள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பதிவேற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.