Friday, July 11, 2025
Home Blog Page 29

1000 வாங்க வேண்டுமா.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதிங்க!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0

Ration: அந்தியோதயா அன்ன யோஜனா, PHH யின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை அதாவது 14ஆம் தேதி சிறப்பு குறைத்தீர்ப்பு முகாமை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிலும் சென்னையில் மண்டலம் வாரியாகவும், மற்றும் மாவட்டங்களில் வட்ட அலுவலங்களிலும் நடைபெறுவதாக கூறியுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.ஏதேனும் பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் பெயர் நீக்கம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த முகம் மூலம் மாற்றம் செய்து கொள்ளலாம்.

வரும் நாட்களில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் என தொடங்கி பலருக்கும் ஒரு ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளது. அச்சமயத்தில் ரேஷன் அட்டையில் மாற்றம் செய்யும்போது சிரமம் ஏற்படுவதை தவிர்க்க தற்போதே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 7 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் அட்டை மூலம் அத்தியாவசியம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது இது ரீதியாக புதிய அறிவிப்பையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பொது விநியோகத் திட்ட பயனாளிகளுக்கு வரும் சனிக்கிழமை குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குறைகளை தெரிவித்து சரி செய்து கொள்ளலாம்.

நான் சொல்வதை கேட்டால் பதவி.. அன்புமணிக்கு கெடு வைத்த ராமதாஸ்!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மற்றும் மகனுக்கிடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கட்சி இரண்டாக பிரியக் கூடும் என எண்ணி பாஜக தலைமையானது ஆடிட்டர் குருமூர்த்தி வைத்து காய் நகர்த்தி பார்த்தது. பேச்சுவார்த்தை சமரசத்தில் முடிந்ததாக வெளியே கூறப்பட்டாலும் தனது நிலைப்பாட்டிலிருந்து ராமதாஸ் பின்வாங்குவதாக தெரியவில்லை.

அந்த வகையில் முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கும் செயலை ஒரு பக்கம் ராமதாஸ் தொடர்ந்து வந்தாலும் அவர்களை நியமிக்கும் வேலையை அன்புமணி செய்து வருகிறார். இதனால் கட்சி நிலையை கண்டு தொண்டர்கள் நிர்வாகிகள் என பலருக்கும் குழப்பநிலை உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் செய்தியாளர்கள் இது ரீதியாக ராமதாஸிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் பதிலளித்ததாவது, குருமூர்த்தி, சைதை துரைசாமி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த முடிவு உண்டாகவில்லை. அதேபோல சமூக நீதிப் பேரவை தலைவராக ஒருவர்தான் இருக்க வேண்டும் என்று நிபந்தனை கிடையாது. அதனால் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன் அதன் பின் அன்புமணி அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வார்.

நான் பாமகவில் இருப்பவர்களை தொண்டர்களாக பார்க்கவில்லை அவர்களெல்லாம் வணங்கப்பட வேண்டிய தெய்வங்கள். அன்புமணி தலைவராக இருந்தால் யாரும் பார்க்க முடியாது அவர் யாரிடமும் பேசவும் மாட்டார். அவருடைய மூன்று ஆண்டுகள் தலைமை பதவி காலம் முடிந்துவிட்டது. நான் ஒன்றும் தலைவராக இருந்து கூட்டணி அமைத்து அமைச்சர் பதவியை ஒன்றும் பெறப்போவதில்லை. தற்போது பொதுக்குழு கூட்டி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்து முடிவையும் நான் தான் எடுக்கப் போகிறேன்.

வரும் நாட்களில் எனது சொல்லுக்கு மரியாதை கொடுத்து செயல் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டால் அன்புமணிக்கு தீர்வு கிடைக்கும். பாமகவின் நிறுவனர் நான் தான் என்பதால் மக்கள் இப்போதும் என் பக்கம் தான் ஆதரவு அளிப்பார்கள். இதனால் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நான் சொல்வதை அன்புமணி கேட்க வேண்டும் என்று நேரடியாகவே கூறியுள்ளார்.

மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா; மாணவர்களை சந்திக்க தயாரான தவெக தலைவர் விஜய்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதே மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

தற்போது தொகுதி வாரியாக மக்களுக்கு தனது தொண்டர்கள் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் பரிசு பொருள் வழங்கி வருகின்றார்.

இரண்டு கட்டங்களாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. கடந்த 30ஆம் தேதி முதல் கட்டமாக மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து சான்றிதழ் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு ஜூன் நான்காம் தேதி இரண்டாம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

தற்போது மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி வாரியாக மாணவ மாணவிகளின் லிஸ்ட் எடுத்து தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக பிரித்து மாணவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து விருது வழங்கிய வருகின்றார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.

விவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!

இந்திய அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தகுதி வாய்ந்த விவசாயிகளையும் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு 6000 ரூபாய் மானியம் கொடுக்கப்படுகின்றது.

இதை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் 3 தவணையாக வழங்கப்படும். இந்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டு அறிவிப்பில் பதிவு செயல்முறையை முடித்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற முடியும் எனவும் அறிவித்தது. மேலும் eKYC கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். 

இருபது தவணை பெற விவசாயிகள் பார்மர் ரிஜிஸ்டர் யூபி மொபைல் செயலி அதிகாரபூர்வ, பிஎம் கிசான் வலைதளம் அல்லது ஏதேனும் பொது சேவை வசதியை முதலில் பார்வையிட வேண்டும். அதன் மூலம் பதிவு நடைமுறையை முடிக்க வேண்டும் கூடுதலாக அவர்கள் KYC பூர்த்தி செய்திருப்பது அவசியம். அதனுடன் ஆதார் அட்டை, நில சரிபார்ப்பு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

பி எம் கிசான் யோஜனா என்ற அதிகாரவபூர்வ வலைதளத்தை பார்வையிட்ட பிறகு, பார்மர் பகுதிக்குச் சென்று தங்களது விருப்பத்தை தேர்வு செய்து ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.

அவை அனைத்தும் சரி பார்க்கப்பட்ட பிறகு மொபைல் எண்ணிற்கு ஓடிபி வழங்கப்படும் அதனை அதில் பயன்படுத்தினால் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக விஜய்யுடன் பாமக கூட்டணி உறுதி?? ராமதாஸ் சொன்ன தகவல்!!

PMK TVK: தமிழக அரசியல் களத்தில் அதிமுக திமுக பாஜக பாமக என இவர்கள் ஒருமித்த கூட்டணி இல்லாமல் தனித்து இருப்பதால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தற்போது திமுக மட்டுமே தனது கூட்டணியில் உறுதியாக உள்ளது. மேற்கொண்டு பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்து தற்போது வரை வாய் திறக்கவில்லை.

அதிலும் பாமகவில் உட்கட்சி மோதல் அப்பா மகனுக்கிடையே நிலவி வருகிறது. அதிலும் கட்சி தலைமை பொறுப்பிற்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி என இருவரும் போட்டி போட்டுக் கொண்டும் நிர்வாகிகளை வெளியேற்றியும் அறிவிப்பு விடுகின்றனர். மேற்கொண்டு கூட்டணி குறித்து ராமதாஸ் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அதிலும் விஜய் கட்சியில் இணை போகிறீர்களா என்று கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

இதற்கு ராமதாஸ், தற்போது வரை விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. வரும் காலங்களில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து விஜய்யுடன் கூட்டணி வைக்கலாமா?? என்பது குறித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அதேபோல வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை நான் தான் தலைவர் பதவியில் இருப்பேன் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு தான் அன்புமணி அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்படும் என்று ராமதாஸ் கூறியது சற்று யோசிக்க வேண்டியதாக உள்ளது. விஜய்யுடன் கூட்டணி இல்லை எனக் கூறாததால் காலப்போக்கில் அவருடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

அதிமுக வுக்கும் நமக்கும் 50- 50 தொகுதி.. பிளானை உடனே மாத்துங்க!! மோடிக்கு ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

ADMK BJP: அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளமே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது என்று தெள்ள தெளிவாக கூறிவிட்டது. ஆனால் தமிழக வருகை புரிந்த மத்திய மந்திரி அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில், 2026 ஆம் ஆண்டு அதிமுக பாஜக ஒன்றிணைந்த கூட்டணியில் தான் ஆட்சி அமையும் எனக் கூறியிருந்தார். இவ்வாறு அவர் பேசியது ரீதியாக அதிமுக கட்சிக்குள் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்தது.

ஏதேனும் சலுகைக்காக எடப்பாடி, மறைமுக ஒப்பந்தம் ஏதாவது பாஜக தலைமையில் போட்டு விட்டாரா என்ற கேள்வியும் எழுப்பி வந்தனர். ஆனால் எடப்பாடி மீண்டும் கூட்டணிக்காக தான் ஒன்றினைந்திருக்கிறோம் ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது என விவரித்து கூறினார். இவ்வாறு இருக்கும் சமயத்தில் தற்பொழுது அண்ணாமலை மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து நின்ற பத்தொன்பது சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி வைத்து 11.4 சதவீத வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஏன் ஒரு சில இடங்களில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்து அதிமுகவை பின்னுக்கும் தள்ளியுள்ளது. சமீப காலங்களில் பாஜகவின் வளர்ச்சியானது அபரிமிதமாக இருப்பதால் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் சரிக்கு சமமாக தொகுதிகளை கேட்க வேண்டும்.

அதிமுக 140 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் அதில் 70 தொகுதிகளை பாஜக கேட்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் கூட்டணி ஆட்சி முறையானது தமிழகத்தில் உருவாகும். சட்டமன்றத் தேர்தலில் இதனை செயலுக்கு கொண்டுவரும் பட்சத்தில் அடுத்து 2029 யில் வரப்போகும் மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 30 இடங்களிலாவது NDA கூட்டணி வெற்றி பெறும் என்று உறுதியளித்து கூறியுள்ளார். இவ்வாறு அவர் மோடிக்கே அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்காலிக கிராம உதவியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!

தமிழக அரசு சார்பாக கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

அதில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், மதிப்பெண் விவரங்கள், மற்றும் தேர்வு முறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பணிக்காக தகுதி மற்றும் தேர்வு முறை என்று பார்க்கும் பொழுது தமிழ் ஒரு பாடமாக தேர்வு எழுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதற்காக பத்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஓட்டும் திறன் கொண்டவராகவும் ஓட்டுனர் உரிமம் இருந்தால் நேரடியாக 10 மதிப்பெண்கள் இல்லையெனில் தேர்வின் மூலம் திறன் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழில் வாசித்து, எழுதும் திறன் கொண்டிருந்தால் 30 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட கிராமம் அல்லது குறைந்தபட்சம் தாலுகாவில் வசிப்பவர்களுக்கு வசிப்பிடச் சான்றிதழ் இருந்தால் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு நேர்காணல் நடத்தப்படும். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நடத்தும் நேர்காணலில் அடிப்படையில் 15 மதிப்பெண்கள் SSLC தேர்ச்சி இல்லாதவர்களுக்கும் வாசிக்கும் எழுத்துத்திறனை நிரூபித்தால் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்காலிகமாக கிராம உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் இந்த புதிய உத்தரவை நிரந்தர அரசு பணிக்காக வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி தட்டச்சு தேர்வு இப்படித்தான் நடக்கும்; ஆசிரியர்கள் தலையில் இடியை எறக்கிய தமிழக அரசு!!

தமிழகத்தில் வரும் 2027 முதல் தட்டச்சு தேர்வுகள் கணினி மூலம் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகள் மற்றும் ஐந்து லட்சம் ஆசிரியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கின்றது. இந்நிலையில் தட்டச்சு தேர்வுகள் பல ஆண்டுகளாக தட்டச்சு பொரியின் வாயிலாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில் முதலில் பள்ளிக்கல்வித்துறை தான் இந்த தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

ஆனால் தொழில்நுட்ப கல்வி இயக்கம் தட்டச்சு சுருக்கு எழுத்து தேர்வுகளை நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் சுமார் 5000 தட்டச்சு பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில் 4000 தட்டச்சு பள்ளிகளில் கணினி வகுப்புகளும், தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் அறிவுறுத்தலால் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது தமிழகத்தில் இன்னும் சில தேர்வுகளுக்கு மட்டும் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக நடைபெறும். 2025 மற்றும் 26 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் தட்டச்சு தேர்வுகள் தட்டச்சு இயந்திரத்தின் மூலம் நடைபெறும் அதன் பிறகு 2027 ஆம் ஆண்டு முதல் கணினி பயன்பாட்டில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகளில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 5000 தட்டச்சு பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தட்டச்சு பொறிகளும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளும் உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த முடிவால் அனைவரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் சென்னையில் வணிகவியல் பள்ளியல் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பள்ளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்க வேண்டும். COA கணினி தேர்வினை நடத்திடவும் குறைந்தபட்சம் கல்வி தகுதியான தட்டச்சு ஆங்கில மற்றும் தமிழில் இடைநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களையே இந்த தேர்விற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் புதிய தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்; ரூ27.20 கோடி நிதி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 27 கோடியே 20 லட்சத்தி 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றி அறிக்கையை ஒன்றை அனுப்பியுள்ளார். தொடக்க கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நகராட்சி, மாநகராட்சி ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகள், ஆகியவற்றில் நிரப்பத்தக்க காலி பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியருக்கு 12,000 ரூபாயும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 15 ஆயிரம் ரூபாயும் மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனால் 2024 – 25 ஆம் கல்வியாண்டில் தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மார்ச் வரை மதிப்பூதியம் பெரும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2025-26 ஆம் கல்வியாண்டில் மேற்கண்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க 93 கோடியே 41 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பெறப்பட்டுள்ளது. அதனால் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் மதிப்பூதியம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து கோரிக்கை பெறப்பட்டது.

ஆனால் இதில் தாமதம் ஏற்பட்டதால் ஜூன் ,ஜூலை ஆகிய மாதங்களில் தற்காலிக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா இதை உடனே பண்ணிருங்க; ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் புதிய திட்டம்!

ரயில்வே அமைச்சகம் சார்பாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி மூலம் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிகள் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். முக்கியமான வழித்தடங்களில் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட் தீர்ந்துவிடும். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் கன்னியாகுமரி அதிவேக ரயில், சூப்பர் பாஸ்ட், அனந்தபுரி, வந்தபாரத் ,செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் சவாலாக உள்ளது. டிக்கெட் மின்னல் வேகத்தில் காலியாகும் நிலையில் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுக்க விரும்பும் பயணிகள் தட்கல் டிக்கெட்டை முயற்சி செய்கின்றனர்.

ஒரு ரயிலில் 20% டிக்கெட்டுகள் தட்கலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் இனி ஆதாரை ஐஆர்சிடிசி கனக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை ஜூலை ஒன்றாம் தேதி முதல் சரிபார்க்கப்படுவதினால் ஆதார் இணைத்தவர்களும் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் எனவும் ஜூலை 15ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் வெரிபிகேஷன் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.